காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம்
சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி பகுதியில் தனியார் துறைமுக விரிவாக்கப்பணிக்காக கருத்து கேட்பு தொடர்பான அறிவிப்பு வெளியிட்டப்படுள்ளது. இந்த புதிய துறைமுகம் வரிவாக்க பணி தொடர்பான மக்களின் குறை நிறைகளை தெரிந்துக்கொள்வதற்க்காக 5-9-2023 அன்று கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டுவாரியம் செய்தித்தாளில் விளம்பரம் வெளியிட்டுள்ளது
கருத்து கேட்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு
இந்த நிலையில் கருத்துகேட்பு கூட்டம் நடத்த மாசு கட்டுப்பாட்டுவாரியம் அழைப்பு விடுத்துள்ளது தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது என பூவுலகின் நண்பர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க புதிய துறைமுகத்தால் என்னென்ன சாதக பாதகங்கள் உள்ளது என்பதை பார்க்கலாம். 330 ஏக்கரில் உள்ள அதானி துறைமுகம் 6,111 ஏக்கராக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 15000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் ,
தமிழகம் ஏற்றுமதியை தூண்டும் தளவாட மையமாகும்..தோராயமாக 53 ஆயிரம் கோடி முதலீடல் இத்திட்டம் செயல்படுத்த உள்ளது. தற்போது 3 பெர்த்களை கொண்டுள்ள துறைமுகம் கூடுதலாக 25 புதிய பெர்த்களை பெறும். தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகமாக காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் உருவாகும் .துரைமுகம் விரிவாக்கத்தால் மக்கள் இடப்பெயர்ச்சி இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆட்டோ மொபைல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து 24.65 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட துறைமுகமாகும் என துறைமுக தரப்பு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மக்களுக்கான கோரிக்கை என்ன.?
மேலும் இந்த புதிய துறைமுகம் கட்டுமானத்தின் போது கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகள் என்ன? என்?
1.கடல் அரிப்புக்கு எதிரான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்
2. பொது மக்கள் இடப்பெயர்ச்சி இல்லை என்ற உத்தரவாதம்
3. துறைமுகத்தில் வேலைகள் வழங்க வேண்டும்
4. பழைய சம்பளத்தை தற்போதைய சம்பளத்திற்கு மாற்றியமைத்தல்
5. காட்டுப்பள்ளி மற்றும் பழவேற்காடு இணைக்கும் சிறந்த சாலை
6. வன அனுமதி பெற வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கையாக முன்வைக்கின்றனர்
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமா.?
இந்த கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கும் வகையில், கடல் அரிப்பு ஏற்படும் பகுதிகளை பாதுகாத்து வேறு இடத்தில் கட்டுமான பனிகளை நடைபெரும் என்றும் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பூ உலகின் நண்பர்கள் மற்றும் சில சமூக ஆர்வலர்கள் அப்பகுதி மீனவர்கள் என பலர் இத்துறைமுக விரிவாக்கத்திற்க்கு தங்களது கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் , கடல் அரிப்பு ஏற்படும் என்பாதல் விரிவாக்க திட்டத்தினை கைவிட வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்
துறைமுகம் விரிவாக்கம் மாநில வளர்ச்சிக்கு உதவும்
துறைமுகம் விரிவாக எதிர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி , ஒரு திட்டத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் எதற்கெடுத்தாலும் முட்டுக்கட்டை போடுவதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை. எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகம் என்பது பல வருடங்களாக இயங்கிவருவதுதான்.
அதை இன்னும் விரிவாக்கம் செய்வது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்துக்கும்தான் நல்லது. சுற்றுப்புற சூழல் பாதிக்காத வகையில் சட்டப்படி தான் திட்டங்கள் செயல்படுத்தப்படும் காட்டுப்பள்ளி மக்கள் தங்களின் வாழ்வாதாரம் போய்விடுமோ என்கிற அச்சத்தில் போராடுகிறார்கள். அவர்களுக்குச் சரியான மாற்று ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துதர வேண்டும். அதற்காக துறைமுக விரிவாக்கமே நடக்கக் கூடாது என்று சொல்வதை ஏற்க முடியாது என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பொருளாதார நிலை உயர வாய்ப்பு
போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் விளங்கினாலும் பெருங்களத்தூர், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டது .அதேபோல் சென்னையில் மிகப்பெரிய துறைமுகம் இருந்த போதிலும் அதிக அளவில் சரக்குகளை கையாள வசதியாகவும் தமிழகத்தின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும் புதிய துறைமுகம் அவசியம் என்கின்றனர் மற்றொரு தரப்பினர்.
இதையும் படியுங்கள்
கர்நாடகாவில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான்!