தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அண்ணாசாலை:
பெல்ஸ் சாலை சி.என்.கே. சாலை, ஓ.வி.எம். தெரு, வெங்கடேசன் தெரு, முகமது அப்துல்லா 1வது மற்றும் 2வது தெரு, மியான் சாஹிப் தெரு, அருணாச்சலா தெரு, முருகப்பா தெரு, தைபூன் அலிகான் தெரு, டி.எச்.ரோடு, போலீஸ் குடியிருப்பு, பெரிய தெரு, அப்துல் கரீம் தெரு, டி.வி. நாயுடு தெரு, பார்த்தசாரதி தெரு, அக்பர் சாஹிப் தெரு, மசூதி தெரு, அபிபுல்லா தெரு, பிள்ளையார் கோயில் 1,2,3வது தெருக்கள், மேயர் சிட்டி பாபு, அப்பாவு தெரு, எல்லீஸ் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
பள்ளிக்கரணை அசாம் பவன், தந்தை பெரியார் நகர், ஜாஸ்மின் இன்போடெக், நிவி ஹெச்டி, வேளச்சேரி மெயின் ரோடு, பம்மல் பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு, பாலசுப்ரமணியன் தெரு, பெரியார் நகர், எம்.ஜி.ஆர். சாலை சித்தலபாக்கம் மாம்பாக்கம் பிரதான சாலை, பாபு நகர், ஐஸ்வர்யா நகர், ஆர்.ஜி. நகர், ஆண்டனி குடியிருப்புகள் கடப்பேரி, லட்சுமிபுரம், செல்லியம்மன் நகர், தண்டுமாரியம்மன் நகர், துர்கா நகர், முடிச்சூர் பாலாஜி நகர், சுவாமி நகர், முல்லை நகர், லட்சுமி நகர், கொம்மையம்மன் நகர், நேதாஜி நகர், பெரியார் சாலை, ஸ்ரீராம் நகர், சக்தி நகர், ராயப்பா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
நங்கநல்லூர் மடிப்பாக்கம், சதாசிவம் நகர் 3 முதல் 6வது தெரு, சதாசிவம் 4வது இணைப்பு தெரு மற்றும் பிரதான சாலை, ராமச்சந்திரா சாலை, மூர்த்தி சாலை, மாருதி தெரு, ராஜாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஆவடி:
மிட்டனமல்லி பள்ளித் தெரு, பழவேடு சாலை, டிஃபென்ஸ் காலனி மற்றும் என்கிளேவ், பி.டி.எம்.எஸ்., காந்தி சாலை, பாரதி நகர், உழைப்பாளர் நகர், செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, பாலவாயல், கும்மணூர், மனிஷ் நகர், பெருகாவூர் சோத்துபெரும்பேடு, குமரன் நகர், விஜயநல்லூர், நல்லூர், பார்த்தசாரதி நகர், டோல்கெட், சோழவரம் அலமாதி எபிசி காலனி, விஜயலட்சுமி நகர், டி.எச். ரோடு, கோவிந்தபுரம், பால்பண்ணை ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பொன்னேரி:
பஞ்செட்டி தச்சூர் கூட்டு சாலை, அலிஞ்சிவாக்கம், பெரவள்ளூர் அத்திப்பேடு, நத்தம், ஆண்டார்குப்பம், சத்திரம், மாதவரம், கே.பி.கே.நகர், டி.வி. பாடி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அடையார்:
காந்தி நகர், கானகம் டி.என்.எச்.பி வீட்டுவசதி வாரியம், சிபிடி வளாகம் தரமணி, சர்தார் படேல் சாலை, எல்.பி.சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.