Published : Feb 06, 2025, 09:00 AM ISTUpdated : Feb 06, 2025, 09:06 AM IST
கோவையை தலைமையிடமாகக் கொண்ட ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸாக வழங்கியுள்ளது. 3 ஆண்டுகள் சேவையை முடித்த 140 ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்பட்டுள்ளது,
ஊழியர்களுக்கு 14 கோடியை போனஸாக அள்ளிக் கொடுத்த நிறுவனம்.!
ஊழியர்கள் தான் தொழில் நிறுவனத்தை முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். அந்த வகையில் சிறந்த ஊழியர்கள் கிடைத்தால் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம் தான். முழு அர்ப்பணிப்போடு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளமானது கொட்டிக்கொடுப்பார்கள்.
அதே நேரம் ஊழியர்கள் திறம்பட உழைத்து லாபம் பார்த்து கொடுத்தாலும் ஒரு ரூபாய் கூட தொழிலாளர்களுக்கு ஒதுக்காத நிறுனவங்களும் உண்டு. ஆனால் தங்களுக்கு வருகிற லாபத்தில் சரிசமமாக ஊழியர்களுக்கு பங்கிட்டு கொடுக்கும் நிறுவனங்களும் உண்டு.
24
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட்
அந்த வகையில் தமிழகத்தில் மட்டுமல்ல பல நாடுகளில் நிறுவனங்களுக்கு வருகிற லாபத்தை பொறுத்து ஊழியர்களுக்கு விலை உயர்ந்த கார், பைக், போனஸ் என வாரி கொடுப்பார்கள். இதே கோவையை சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களுக்கு பல லட்சத்தை போனஸாக கொடுத்துள்ளது.
"ஒன்றாக நாம் வளர்கிறோம்" என்ற திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு போனஸ் அள்ளிக்கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவையை தலைமையிடமாக கொண்ட ஐடி நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பாக பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் அறிவித்துள்ளது.
34
3 ஆண்டுகள் வேலை பார்த்தாலே போனஸ்
மேலும் 3 ஆண்டுகள் சேவையை முடித்த 140 ஊழியர்களுக்கு மொத்தம் $1.62 மில்லியன் (ரூ. 14.5 கோடி) போனஸாக வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படிமுதல் கட்டமாக 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஜனவரி 31 அன்று தங்களது மாத ஊதியத்துடன் போனஸைப் பெற்றுள்ளனர்.
மேலும் ஒரு வருடத்தில் பெறும் மொத்த சம்பளத்தில் பாதி அளவு போனஸாக வழங்கப்படுள்ளது. இது தொடர்பாக ஐடி நிறுவனமான கோவை.கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் நிறுவனர் சரவண குமார் கூறுகையில்,
44
கோவை.கோ நிறுவனத்தின் பணி என்ன.?
கோவை.கோ என்பது கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட, முன்னணி B2B SaaS (Software as a Service) நிறுவனம் ஆகும். இதன் BizTalk360, Document360, மற்றும் Turbo360 ஆகிய மூன்று முக்கிய சேவைகள் உலகளவில் 2,500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் லாபத்திற்கும் பங்களிக்கும் ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் தொழிலாளர்களுடன் நிறுவனத்திற்கு வரும் லாபத்தை பகிர்ந்து கொள்வதற்கான வழிகளை கண்டுபிடிப்பது என் நீண்டநாள் கனவாக இருந்து வந்ததாகவும் கூறினார்.