2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பாமக தலைவர் ராமதாஸ் இன்று அறிவிக்கவுள்ள நிலையில் தைலாபுரம் தோட்டத்திற்கு தவெகவின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செல்வதாக தகவல் வெளியாகி பரபரப்பு.
பட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையேயான மோதல் காரணமாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஒரு அணியாகவும், அவரது மகன் அன்புமணி ஒரு அணியாகவும் பிரிந்து தேர்தலை சந்திக்க உள்ளனர். தேர்தல் ரேஸில் முந்திக் கொண்ட அன்புமணி முதல் நபராக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தங்கள் அணியை இணைத்துக் கொண்டார். மேலும் NDA வில் அன்புமணி தரப்புக்கு ஒரு MP இடம் ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அன்புமணி உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
23
முட்டுக்கட்டை போட்ட திருமா
அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பும், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடம் பெற்றிருப்பதால் ராமதாஸ் தரப்புக்கு கூட்டணியை உறுதி செய்வதில் கடும் நெருக்கடி உருவானது. இந்த நிலையில் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்று அறிவிக்கப்போவதாக ராமதாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
33
தவெக + ராமதாஸ்..
ராமதாஸ் தரப்பைப் போன்றே தமிழக அரசியலில் தனித்து விடப்பட்ட கட்சியாக தவெக உள்ளது. கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வழங்கப்படுமென அறிவித்தும் கூட தற்போது வரை எந்த கட்சியும் கூட்டணியில் சேர முன்வரவில்லை. இந்த நிலையில் தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தைலாபுரம் தோட்டத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவும் அண்மையில் ராமதாஸ்ஐ நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டணி உறுதி செய்யப்படும் பட்சத்தில் விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தி வட மாவட்டங்களில் ராமதாஸ், தென் மாவட்டங்களில் சசிகலாவை வைத்து அதிரடி ஆட்டத்தை மேற்கொள்ள தவெக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.