தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
இதனால் வீடு மற்றும் ஓட்டல்களில் தக்காளி சார்ந்த உணவு வகைகள் தயாரிப்பதை தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக நியாயவிலைக்கடைகளில் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையானது. இருந்த போதும் பெரும்பாலான மக்களுக்கு நியாயவிலைக்கடை தக்காளி கிடைக்காத காரணத்தால் வெளி மார்க்கெட்டில் வாங்கினர். இந்தநிலையில் தான் தக்காளி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் தக்காளியை குப்பை தொட்டியில் கொட்டிய நிலையில் மாற்று பயிருக்கு சென்றதால் தக்காளி உற்பத்து குறைந்ததாக தெரிவிக்கின்றனர்.