குட்நியூஸ்.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

Published : Aug 18, 2023, 07:05 AM ISTUpdated : Aug 29, 2023, 10:56 AM IST

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை என அம்மாட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

PREV
14
குட்நியூஸ்..  இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

ஓணம் இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியை சூழ்ச்சியால் வீழ்த்திட , திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும் கொண்டாடுகின்றனர்.

24

அந்த வகையில் ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் கேரள மாநிலத்தில் மிகுந்த கோலாகலமாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 

34

இந்நிலையில் கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி  மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை  என மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் அறிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறை நாளான இன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு நீலிகிரி மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

44

இந்த விடுமுறையை ஈடும் செய்யும் வகையில் செப்டம்பர் 16ம் தேதியான சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories