School holiday schedule : தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரசு ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறை வருவதால், வெளியூர் செல்ல ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது,
விடுமுறை என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாட்டம் தான். அந்த வகையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை 2025-26 கல்வியாண்டுக்கான நாட்காட்டியை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பள்ளிகள் 210 நாட்கள் செயல்படும்.
அனைத்து சனி, ஞாயிறு நாட்களும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தாண்டு பள்ளியானது ஜூன் 5ஆம் தேதி திறக்கப்பட நிலையில், நடப்பு ஆண்டின் பள்ளி இறுதி நாட்களாக ஏப்ரல் 24 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
24
காலாண்டு தேர்வு முடிவு
மேலும் பள்ளி நாட்காட்டியில் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுக்கான தேதியும், விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
நாளையுடன் தேர்வு முடிவடையவுள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது. அந்த வகையில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு அக்டோபர் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது.
34
நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை
அதே நேரம் ஒரு சில தனியார் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை தேர்வானது 6 நாட்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது. அந்த வகையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது.
எனவே பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளதால் வெளியூர் செல்ல மற்றும் சுற்றுலாவிற்கான திட்டங்களை வகுத்து வருகிறார்கள். இதன் காரணமாக அனைத்து ரயில்களிலும் முன்பதிவு நிரம்பியுள்ளளது.
மேலும் தனியார் பேருந்துகளிலும் கட்டணமானது பல மடங்கு அதிகரித்துள்ளது. எப்போதும் 800 முதல் 900 ரூபாய் வரை விற்பனையான டிக்கெட் விலை தற்போது 2000 ரூபாயை தொட்டுள்ளது. எனவே சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியாகுமா.? என பயணிகள் காத்துள்ளனர்.