வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்த அம்மா! கதறிய பச்சிளம் குழந்தை! வாக்குமூலத்தை கேட்டு கிறுகிறுத்துப் போன போலீஸ்!

Published : Sep 12, 2025, 05:45 PM IST

Child Baby Murder: கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 நாள் குழந்தை மர்மமான முறையில் இறந்த நிலையில், தாயாரின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் அன்புக் குறைவு காரணமாக குழந்தை கொலை.

PREV
15
காதலித்து திருமணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே உள்ள பாலூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள் (20). இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் வடக்கு வேடச்சந்தூர் நாககோனானூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கார்த்திக் மனைவியின் வீட்டில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

25
பெண் குழந்தை

கர்ப்பிணியாக இருந்த பெனிட்டா ஜெய அன்னாளுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஒரு ஆழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 9-ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவு கார்த்திக் வீடு திரும்பியுள்ளார். அப்போது குழந்தையை கொஞ்சுவதற்காக அருகில் சென்ற போது மூச்சு பேச்சு இல்லாமல் அசைவற்ற நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

35
மருத்துவர்

மேலும் குழந்தையின் நெற்றியில் காயமும் இருந்துள்ளது. இதுதொடர்பாக மனைவியிடம் கேட்ட போது பால் குடிக்கும் போது குழந்தை தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் குழந்தையை தூக்கிக்கொண்டு கருங்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியதை கேட்டு கார்த்தி கதறி அழுதார்.

45
பிரேத பரிசோதனை அறிக்கை

இதுகுறித்து கார்த்தி கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

55
தாய் கைது

இதையடுத்து போலீசார் குழந்தையின் தாயிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தையை கொன்றதை ஒப்பு கொண்டார். மேலும் , எனக்கு குழந்தை பிறந்து 40 நாட்கள் ஆனது. அன்றில் இருந்தே என் கணவர் என் மீது செலுத்தும் அன்பு குறைந்தது. இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம் குழந்தை தான் என்ற ஆத்திரத்தில் சம்பவத்தன்று குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து கொன்றேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories