SSLC Exam Result: தமிழ் தவிர்த்து அனைத்து பாடங்களிலும் சதம் விளாசிய மாணவிகளுக்கு குவியும் பாராட்டு

First Published | May 10, 2024, 2:58 PM IST

தமிழகத்தில் இன்று 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து மூன்று மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பள்ளி மாணவி சஞ்சனா அனுஷ் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை. தமிழில் 99 மார்க் பிற அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண் எடுத்து சாதனை மாணவியின் தந்தை வெளிநாட்டில் உள்ள நிலையில் தாய் கொரனோ காலத்தில் தனது ஆசிரியை பதவியை உதறி விட்டு மகளின் படிப்பை கவனித்து வந்துள்ளார்.

இதே போன்று ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த காவியா ஜனனி என்ற மாணவியும் தமிழில் 99 மதிப்பெண்களும், பிற அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்களும் பெற்று மொத்தமாக 499 மதிப்பெண்கள் சேர்த்து சாதனை படைத்துள்ளார்.


இதே போன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கொசவப்பட்டி அக்சயா பள்ளி மாணவ காவியா ஸ்ரீ  தமிழில் 99 மதிப்பெண்களும், பிற அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்களும் பெற்று மொத்தமாக 499 மதிப்பெண்கள் சேர்த்து சாதனை படைத்துள்ளார்.

Latest Videos

click me!