மொத்தமா வரும் 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் தான்

Published : Sep 01, 2025, 10:52 AM IST

செப்டம்பர் மாதத்தில் விடுமுறை நாட்கள் குறைவாக இருந்தாலும், மிலாது நபி விழாவையொட்டி வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

PREV
14
தமிழகத்தில் தொடர் விடுமுறை

விடுமுறை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டம் தான். அதிலும் தொடர் விடுமுறை என்றால் கேட்கவா வேண்டும் உடனே வெளியூர்களுக்கு சுற்றுலா புறப்பட்டு விடுவார்கள். ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்ற இடங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடி வருகிறார்கள். அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் வரும் வாரம் தொடர் விடுமுறையானது கிடைக்கவுள்ளது. 

பள்ளி மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டது. அந்த மாதம் முழுவதும் வார விடுமுறை'r தவிர கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைக்கவில்லை. அடுத்தாக வந்த ஜூலை மாதமும் மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது. 

24
ஏமாற்றம் அளித்த ஜூன், ஜூலை மாதம்

அதுவும் மொகரம் பண்டிகை ஞாயிற்றுக்கிழமையில் வந்ததால் கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் குஷியான மாதமாக அமைந்தது. கொத்து கொத்தாக விடுமுறை கிடைத்தது. 

அந்த வகையில், வரலட்சுமி நோன்பு, சுதந்திர தின விழா, கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக 4 நாட்கள் கூடுதலாக விடுமுறை நாட்களாக அமைந்தது. இதனால் உறவினர்கள் வீட்டிற்கும் சுற்றுலாவிற்கும் பொதுமக்கள் சென்று வந்தனர்.

34
கொண்டாட வைத்த ஆகஸ்ட் மாதம்

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் பெரிய அளவில் விடுமுறை இல்லாத மாதமாக அமைந்துள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகை, செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பண்டிகையையொட்டி தமிழகத்தின் சில பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வாய்ப்புள்ளது. நவராத்திரி ஸ்தாபனம் செப்டம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது. 

இந்த விழாவையொட்டி சில மாநிலங்களில் விடுமுறை வழங்கப்படலாம். மகாசப்தமி செப்டம்பர் 29-ம் தேதியும், மகாஷ்டமி 30-ம் தேதியும் கொண்டாடப்படும். மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம், பீகார், திரிபுரா மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் துர்கா பூஜைக்காக விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

44
3 நாள் தொடர் விடுமுறை

ஆனால் இந்த விடுமுறை நாட்கள் தமிழகத்திற்கு பொருந்தாது. அதே நேரம் வருகிற 5ஆம் தேதி மிலாது நபி விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தமிழகத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருகிற வெள்ளிக்கிழமை செப்டம்பர் 5, செப்டம்பர் 6ஆம் தேதி சனிக்கிழமை, செப்டம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories