ஏசி வாங்க ஆன்லைனில் பணம்.! கோவையில் கடை உரிமையாளரை ஸ்கெட்ச் போட்டு ஏமாற்றி கும்பல்

Published : Feb 19, 2025, 07:48 AM IST

கோவையில் ஆன்லைனில் ஏசி வாங்குவதாக கூறி மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, பணம் செலுத்தியதற்கான ரசீதை அனுப்பி ஏமாற்றியுள்ளனர்.

PREV
15
ஏசி வாங்க ஆன்லைனில் பணம்.! கோவையில் கடை உரிமையாளரை ஸ்கெட்ச் போட்டு ஏமாற்றி கும்பல்
ஏசி வாங்க ஆன்லைனில் பணம்.! கோவையில் கடை உரிமையாளரை ஸ்கெட்ச் போட்டு ஏமாற்றி கும்பல்

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு முன்னேற்றங்கள் அடைந்து வரும் நிலையில் மறு பக்கமோ அதனை பயன்படுத்தி மோசடி சம்பவங்களும் அரேங்கேறி வருகிறது. அந்த வகையில் கோவையில் ஏசி வாங்குவதற்கு ஆன்லைனில் பணம் செலுத்தியதாக கூறி மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம் சூலூர், போகம்பட்டி, பகுதியில் வசிக்கும் தினேஷ் குமார், "சிறுவாணி ஏர் கண்டிஷனிங் சொல்யூஷன்ஸ்" என்ற பெயரில் ஏர் கண்டிஷணர்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

25
கோவையில் ஏசி வாங்க ஆன்லைனில் பணம்

கடந்த நவம்பர் மாதம்  மர்ம நபர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் தினேஷ்குமாரை தொடர்பு கொண்டு, தன்னை சிவகுமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளார். மேலும் பிரணவ் ஹார்டுவேர்ஸ் என்ற நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறிக் கொண்ட அந்த நபர், ப்ளூ ஸ்டார் ஸ்பிளிட் ஏர் கண்டிஷனரை வாங்க விரும்புவதாகக் கூறி உள்ளார். இதனை நம்பிய தினேஷ்குமார் ஏர்கண்டிஷ்ணர் குறித்த விலை மற்றும் விவரங்களை சிவக்குமாருக்கு தெரிவித்து உள்ளார்.

35
போலியாக ஆன்லைனில் பணம் வழங்கியதாக மோசடி

இதையடுத்து சிவக்குமார் நிறுவனத்தின் பெயர், ஜி.எஸ்.டி தகவல், யு.டி.ஆர் எண் ஆகியவற்றை தினேஷ்குமாரின் வாட்ஸாப் எண்ணிற்க்கு அனுப்பியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில்  வங்கி கணக்கில் இருந்து பணம் டெபிட் ரசீது போன்ற விவரங்களை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொண்டனர்.  இதனை நம்பிய சிவக்குமார் யுவராஜ் என்ற ரேபிடோ (RAPIDO) டெலிவரி நபர் மதினேஷ் குமாரின் அலுவலகத்திற்கு வந்து, 72 ஆயிரம் மதிப்பிலான  ஏர் கண்டிஷனர்களை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கு இருந்து சென்றதாக தெரியவருகிறது.

45
ஏமாற்றத்தை உணர்ந்த கடை உரிமையாளர்

இதனையடுத்து தனது வங்கி கணக்கை தினேஷ் சரிபார்த்த போது பணம் எதுவும் வங்கி கணக்கில் வரவில்லை என்பதையும், அவர் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்தார். இதனையடுத்து  கோவை மாநகர சைபர் கிரைம் காவல்  நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்.

55
3 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்

மோசடியில் ஈடுபட்டதாக கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல் காதர், கோட்டைமேடு பகுதியை சேர்ந்த முகமதுஅலி மற்றும் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த் மன்சூர்அலி ஆமியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மூவரும் ஆள்மாறாட்டம் செய்து ஆன்லைனில் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.

மேலும் இவர்கள் மீது. ஏற்கனவே மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளதும் தெரியவந்து உள்ளது. இதை அடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories