School Student: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் மே மாதம் 20ம் தேதி வெளியாக உள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதாவது தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 11, ஆங்கில மொழிப்பாடம் மார்ச் 16, கணிதம் மார்ச் 25, அறிவியல் மார்ச் 30, ஏப்ரல் 2 தேதி சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாட தேர்வு ஏப்ரல் 6 தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வை சுமார் 8.7 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்புபொதுத்தேர்வை எழுத உள்ளனர். தேர்வு முடிவுகள் மே மாதம் 20ம் தேதி வெளியாக உள்ளது.
24
அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவ, மாணவியரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.
34
பிப்ரவரி 18ம் தேதி வரை டைம்
தற்போது மார்ச் மற்றும் ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவ, மாணவியரின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை பிப்ரவரி 18ம் தேதிக்குள் dgeapptnschools.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பள்ளியின் User id மற்றும் Password-ஐ Login செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களை சார்ந்த அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (இடைநிலை/தனியார் பள்ளிகள்) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், புதுச்சேரியில் இணை இயக்குநர் (கல்வி) மற்றும் காரைக்காலில் முதன்மைக் கல்வி அலுவலர் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.