3 முதல் 5 ஆம் வகுப்பு மாணவியருக்கு ரூ. 500... 6 ஆம் வகுப்புக்கு ரூ.1000- தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு

Published : Sep 20, 2025, 09:01 AM IST

Rural girl student scholarship : கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை குறைக்கவும் அரசு புதிய ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவியருக்கு ₹500 முதல் ₹1000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்

PREV
13
மாணவர்களுக்கு கல்வி திட்டங்கள்

கல்வி தான் மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மாணவர்கள் கல்வியை பெற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வி உதவித்தொகை, இலவச காலை மற்றும் மதிய உணவு திட்டம், இலவச பேருந்து பயண அட்டை, இலவச மிதிவண்டி போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில் கிராமப்புற மாணவியர்களுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 3ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 500 ரூபாய் வழங்கப்படுகிறது. 6 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

23
மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கிராமப்புற பள்ளி மாணவியருக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அந்த வகையில் கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், கல்வியின் இடைநிற்றலை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

அந்த வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு ஊக்கத்தொகையாக 3 ஆம் வகுப்பு முதல் 5 வரை மாணவியருக்கு ரூ. 500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்பு மாணவியருக்கு ரூ. 1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

33
ஊக்கத்தொகை பெற தகுதிகள்

தகுதிகள் :

பெற்றோர்கள் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவியர் பயில்பவராக இருக்க வேண்டும்.

மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு மட்டும்.

விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

அணுகவேண்டிய அலுவலர் :

சம்பந்தப்பட்ட கிராமப்புற அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories