திருச்சி பெல் நிறுவன அலுவலகத்தில் அதிர்ச்சி! பொதுமேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! காரணம் என்ன?

Published : Mar 12, 2025, 11:30 AM IST

Trichy BHEL General Manager Commit Suicide: திருச்சி பெல் நிறுவனத்தில் பொது மேலாளர் சண்முகம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
திருச்சி பெல் நிறுவன அலுவலகத்தில் அதிர்ச்சி! பொதுமேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! காரணம் என்ன?
Trichy bhel

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் போபால், அரித்வார், ஐதராபாத், சான்சி போன்ற இடங்களில் உள்ளது. சுமார் 7,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 

24
Trichy BHEL Officer

இந்நிலையில் பெல் நிறுவனத்தில் எஸ்எஸ்டிபி எனப்படும் ஸ்டீல் டியூப் பிரிவின் பொது மேலாளர் சண்முகம்(50). வழக்கம் போல வீட்டில் இருந்து பணிக்கு வந்துள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போதும் அவர் எடுக்கவில்லை. இதனையடுத்து உறவினர் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சண்முகத்தை தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக பணி முடிந்தும் சண்முகம் வீட்டுக்கு வரவில்லை என்பது பற்றி குடும்பத்தினர் பெல் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

34
Suicide

பின்னர் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அவரது அலுவலக அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனையடுத்து அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சண்முகம் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். 

44
Police investigation

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சண்முகம் பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிமம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. 

click me!

Recommended Stories