வேளாண்மை
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சி மாவட்ட வேளாண்முஸ்ரீதுறை மூலம் 2024 - 25ம் ஆண்டுக்கான மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்கி தொழில் முனைவோர் ஆகும் திட்டத்திற்கு ரூ.1 லட்சம் மானியம் வேளாண் துறை மூலமாக வழங்கப்படுகிறது.
வேளாண்மை
தற்போது திருச்சி மாவட்டத்திற்கு வேளாண்மை தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற 21 முதல் 40 வயதுக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இல்லாத சிறந்த கணினி அறிவுடைய வேளாண் தொடர்பான செயலிகளை பயன்படுத்தும் திறன் கொண்ட பட்டதாரிகள் 3 பேர் வேளாண் தொழில் முறைவோராக செயல்பட தமிழக அரசின் அரசாணை பெற்பட்டுள்ளது.
வேளாண்மை
இதன் மூலம் பயனாளி தனது மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும். இதற்கு உட்கட்டமைப்பு நீங்கலாக அதிகபட்சமாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும். எனவே தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
வேளாண்மை
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பிற்கான சான்றிதழ் உத்தேசித்துள்ள தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு நகல் மற்றும் வங்கியில் கடன் உதவி பெற்று திட்டம தொடங்குபவர் எனில் அதற்கான ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களையும், விரிவான திட்ட அறிக்கையையும் ஆக்ரிஸ்நெட் வலைதளத்தில் பதிவேற்றி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம்” என்று ஆட்சியரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.