6 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த திருச்சி காவிரி பாலம்

First Published Mar 4, 2023, 9:49 AM IST

திருச்சியில் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த காவிரி பாலம் பணிகள் நிறைவடைந்து மீண்டும் போக்குவரத்து பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட்டது.

Trichy Cauvery Bridge

திருச்சி - ஸ்ரீரங்கத்தை (திருவரங்கம்) இணைக்கும் காவிரி ஆற்று பாலத்தில் நாள் தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதக அளவிலான வாகனங்கள் நாள்தோறும் கடந்து செல்லும் நிலையில் பாலத்தின் தார் சாலைகள் பெயர்ந்து கான்கிரீட் தளங்கள் வெளியில் தெரியும் அளவிற்கு பள்ளங்கள் ஏற்பட்டன.

Trichy Cauvery Bridge

பாலத்தில் பழுது ஏற்பட்ட நிலையிலும், பாலத்தை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையோ, வாகனங்களின் வேகமோ குறைந்ததாக இல்லை. இதனால் பாலம் நாளுக்கு நாள் வலுவிழந்து வந்தது.
 

Trichy Cauvery Bridge

இதனைத் தொடர்ந்து பாலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சீரமைப்பு பணிகளுக்காக பகுதியாக மூடப்பட்டது. இதனால் சுமார் 6 மாத காலமாக இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

Trichy Cauvery Bridge

கனரக வாகனங்கள், பொதுபோக்குவரத்து வாகனங்கள் நான்கு வழிச்சாலையை சுற்றி மீண்டும் ஊருக்குள் வரவேண்டிய நிலை இருந்தது.
 

Cauvery Bridge

இந்நிலையில் ரூ.6.84 கோடி மதிப்பில் பாலத்தை சீரமைக்கும் பணி அண்மையில் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு காவிரி பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் பேருந்து உட்பட கனரக வாகனங்கள் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

click me!