தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் மற்றும் நகரம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு 18. 11. 2023 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)-ன்படி திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 4 (நான்கு) மதுபானக் கடைகள் மட்டும் மூடப்பட்டிருக்க வேண்டும்.