அம்மா உணவகத்தில் அதிர்ச்சி! சாம்பார் சாதத்தில் அரணை.. சாப்பிட்டவரின் நிலை என்ன?

First Published | Sep 17, 2023, 6:52 AM IST

தூத்துக்குடியில் அம்மா உணவகத்தில் வாங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் அரணை இருந்த சம்பவம் வாடிக்கையாளரை அதிர்ச்சி அடைய செய்தது. 

amma unavagam

தூத்துக்குடி மாவட்டம் ராஜூவ் நகரில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சரவணன் மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில்  தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு சாம்பார் சாதங்களை பார்சலாக ஒரு டப்பாவில் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வாங்கிச் சென்றுள்ளார். பின்னர், வீட்டில் தனது மனைவியுடன் சேர்ந்து சாம்பார் சாதத்தை சரவணன் சாப்பிட்டுள்ளார். 

Tap to resize

திடீரென  சாம்பார்  சாதத்தில் அரணை கிடந்ததை பார்த்து அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அரணை விழுந்த சாம்பார் சாதத்துடன் நியாயம் கேட்க அம்மா உணவகத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அம்மா உணவகம் மூடப்பட்டிருந்தது. உடனே சாப்பிட்டதை கைவிட்டு வாந்தி எடுத்துள்ளார். பின்னர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டதை அடுத்து தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!