25 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுகவுடன் நேரடி மோதல்... கடைசியாக முருகனிடம் சரணடைந்த திமுக...!

First Published | Apr 3, 2021, 4:47 PM IST

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவும், அதிமுகவும் நேருக்கு நேர் மோதுகிறது. இதனால் இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முறை அதிமுக, திமுக, நாம் தமிழர், மநீம, அமமுக என ஐந்து கட்சிகளும் முதல்வர் வேட்பாளர்களை களமிறக்கி தேர்தலில் போட்டடியிடுவதால் கடும் போட்டி நிலவி வருகிறது.
வேட்பாளர்களும் தற்கால சோசியல் மீடியா ட்ரெண்டிங்கிற்கு ஏற்ற மாதிரி காய்கறி விற்பது, துணி துவைப்பது, பாட்டு பாடுவது, சிறுவர்களுடன் விளையாடுவது, மீன் விற்பது, தோசை சுடுவது, வயலில் இறங்கி நாற்று நடுவது, வாக்காளர்களுடன் டான்ஸ் ஆடுவது என நூதன முறைகளில் வாக்கு சேகரித்தனர்.
Tap to resize

ஒருபுறம் அரசியல் கட்சி தலைவர்கள், மறுபுறம் வேட்பாளர்கள் என கொரோனாவையும், கொடூர வெயிலையும் கூட பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருத்தணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அக்கட்சியினர் செய்த நூதன செயல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவும், அதிமுகவும் நேருக்கு நேர் மோதுகிறது. இதனால் இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது.
திமுக சார்பில் திருத்தணி தொகுதியில் எஸ்.சந்திரன் போட்டியிடுகிறார். வெற்றிக்கனியை தட்டிப் பறிக்க வேண்டும் என்ற உறுதியுடன் சந்திரனும் அவருடைய ஆதரவாளர்களும் திருத்தணி தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருத்தணி தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரன் வெற்றி பெற வேண்டி, முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள 365 படிக்கட்டுகளை முட்டிபோட்டு ஏறிச் சென்று, திமுகவினர் வழிபாடு நடத்தினர்.
ஆர்.கே.பேட்டை அருகேயுள்ள பாலாபுரம் திமுக கிளைச் செயலர் சந்திரசேகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் நேற்று மலையடிவாரத்திலிருந்து மலை மீது உள்ள கோயில் வரை முட்டிபோட்டவாறே ஏறிச்சென்று, முருகனிடம் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Latest Videos

click me!