இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு! நீர் மேலாண்மையில் அசத்திய நெல்லை மாவட்டம்!!! மத்திய அரசின் உயரிய விருது…

Published : Nov 12, 2025, 08:07 PM IST

National Water Awards 6வது தேசிய தண்ணீர் விருதுகள் 2024 அறிவிப்பு! சிறந்த மாவட்டமாக (தெற்கு மண்டலம்) திருநெல்வேலிக்கு முதலிடம். தமிழகத்திற்குத் தொழில், நீர் மேலாண்மை பிரிவுகளிலும் விருது.

PREV
14
National Water Awards தேசிய தண்ணீர் விருதுகள்: தமிழகத்தின் மகத்தான வெற்றி!

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீர்வளத் துறை இன்று (நவம்பர் 11, 2025) 6வது தேசிய தண்ணீர் விருதுகள் 2024-ன் வெற்றியாளர் பட்டியலை வெளியிட்டது. இதில், தமிழகம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு பல்வேறு பிரிவுகளில் முதன்மை விருதுகள் கிடைத்துள்ளன. நீரைச் சேமித்தல் மற்றும் நிர்வாகத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பாராட்ட 2018 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

24
சிறந்த மாவட்டமாகத் திருநெல்வேலிக்கு முதலிடம்!

தேசிய அளவில் 'சிறந்த மாவட்டம்' என்ற பிரிவில், தெற்கு மண்டலத்தில் (South Zone) தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நீர்வள மேலாண்மை, நீர் சேமிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளில் திருநெல்வேலி மாவட்டம் மேற்கொண்ட சிறப்பான முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

34
தமிழகம் அள்ளிய பிற முக்கிய விருதுகள்!

தேசிய தண்ணீர் விருதுகளில் திருநெல்வேலி மாவட்டத்தைத் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த வேறு சில நிறுவனங்களும், சங்கங்களும் பெருமை சேர்த்துள்ளன:

• சிறந்த தொழில் (Best Industry): காஞ்சிபுரத்தில் உள்ள அப்போலோ டயர்கள் லிமிடெட் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நீர் மறுசுழற்சி மற்றும் தொழிற்சாலைகளில் நீர் மேலாண்மை ஆகியவற்றில் சிறந்த பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

• சிறந்த நீர் பயனர் சங்கம் (Best Water User Association): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ஓடையகுளம் கிராம நீர் பயனர் சங்கம் முதலிடத்தை வென்றுள்ளது. நீர்ப்பாசன நீர் மேலாண்மையில் இந்தச் சங்கத்தின் கூட்டு முயற்சி பாராட்டப்பட்டுள்ளது.

• சிறந்த கிராம பஞ்சாயத்து (Best Village Panchayat): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாலாபுரம் கிராமம் இந்த பிரிவில் மூன்றாம் இடத்தை (கூட்டு வெற்றியாளர்) பெற்று, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.

44
National Water Awards குடியரசுத் தலைவர் வழங்கும் கௌரவம்!

தேசிய தண்ணீர் விருதுகளை வென்ற 46 வெற்றியாளர்களுக்கும், 2025 நவம்பர் 18 ஆம் தேதி டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்த விருது, நீர்வளத் துறையில் நிலையான கொள்கைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மத்திய அரசின் தொடர் முயற்சியைப் பிரதிபலிக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories