கல்யாணமான 13 நாட்களில் புதுமாப்பிள்ளை விபரீத முடிவு! நெஞ்சில் அடித்து கதறும் குடும்பம்! மனைவி அப்படி என்ன செய்தார்?

Published : Nov 17, 2025, 11:11 AM IST

திருப்பூரில், திருமணமாகி 13 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை, மனைவி உடனான தகராறில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த சோகம்.

PREV
14
காதலித்து திருமணம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கவுதம் (31). இவர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காற்றாலை நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்த 29 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.

24
பெட்ரோல் ஊற்றி தீ குளிப்பு

இதனையடுத்து இருவரும் கடந்த 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து மூலனூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான கவுதம் யாரும் எதிர்பாராத விதமாக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் வலியால் அலறிய துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு தீயை அணைத்தனர்.

34
புதுமாப்பிள்ளை பலி

இதனையடுத்து தீக்காயம் அடைந்த நபரை அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

44
திருமணமாகி 13 நாட்களில் தற்கொலை

இந்த சம்பவம் தொடர்பாக மூலனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கவுதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 13 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories