கடலூர் ரயில் விபத்து! ஓட்டுநர் ரயில் கேட்டை திறக்க சொன்னாரா? உண்மை அம்பலமானது!

Published : Jul 12, 2025, 09:53 AM IST

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலி. கேட் கீப்பர் அலட்சியம் எனக் கூறப்பட்ட நிலையில், வேன் ஓட்டுநர் தன்னை கேட் மூட வேண்டாம் எனக் கூறியதாகக் கேட் கீப்பர் தெரிவித்தார். ஆனால், வேன் ஓட்டுநர் இதனை மறுத்திருந்தார்.

PREV
14
பள்ளி வேன் மீது ரயில் மோதல்

கடலூரில் செம்மங்குப்பம் அருகே ஜூலை 8ம் தேதி காலை 8 மணியளவில் கடலூர்-ஆலப்பாக்கம் இடையே தனியார் பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வேகமாக வந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில், வேனில் இருந்த குழந்தைகள் அலறியபடி தூக்கி வீசப்பட்டனர்.

24
3 பள்ளி மாணவர்கள் பலி

இந்த கோர விபத்தில் சாருமதி, செழியன், நிவாஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இதில் சாருமதி மற்றும் செழியன் அக்கா, தம்பியாகும். மேலும் வேன் ஓட்டுநர் சங்கர் மற்றும் மாணவர் விஸ்வேஷ் உள்ளிட்டோர் படுகாயமடைந்ததை அடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முதலில் கேட் கீப்பர் அலட்சியத்தால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் ரயில்வே துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்தது. அதாவது செம்மங்குப்பத்தில் ரயில் வருவதை அறிந்து கேட்டை மூடுவதற்கு கேட் கீப்பர் முயற்சி செய்தார். அப்போது பள்ளி வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் தான் கடந்து செல்லும் வரை மூட வேண்டாம் என்றார். பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றபோது ரயில் மோதியதாக விளக்கமளித்திருந்தது. இந்த விபத்து தொடர்பாக கேட் கீப்பர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.

34
நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை

இந்நிலையில் வேன் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வேன் ஓட்டுநர் நான் செல்லும்போது கேட் திறந்துதான் இருந்தது. நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை. கேட்டை மூட வேண்டாம் என நான் சொல்லவே இல்லை. ரயில் ஹாரன் சத்தம் கூட அடிக்கவில்லை. கேட் கீப்பரும் அந்த இடத்தில் இல்லை என கூறியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

44
கேட் கீப்பர் பொய்யான தகவல் கூறியது அம்பலம்

அதாவது பள்ளி வேன் விபத்தின்போது லெவல் கிராசிங் கேட் திறந்திருந்ததற்கான ஆதாரங்களை புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது. கேட் கீப்பர் பங்கஜ் கேட்டை (LC-170)திறந்தே வைத்திருந்தது உறுதியாகியுள்ளது. மேலும் ரயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணைக் ஸ்டேஷன் மாஸ்டருக்கு கொடுத்துள்ளார். விபத்துக்குப் பின் ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து கேட்டை மூடவில்லை என்று ஒப்புக்கொண்டது ரயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories