அரசு பேருந்தில் இளம்பெண்ணை மடியில் உட்கார வைத்து! கண்ட இடத்தில் கை வைத்து எல்லை மீறல்! தலையில் அடித்துக்கொண்ட பயணிகள்!

Published : Feb 10, 2026, 12:18 PM IST

கோவையில் உக்கடத்தில் இருந்து சூலூர் சென்ற அரசுப் பேருந்தில், கல்லூரி காதல் ஜோடி ஒன்று சக பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் எல்லை மீறி நடந்து கொண்டது. இதுதொடர்பான வீடியோ வைரல்.

PREV
14

பொது இடங்களில் காதல் ஜோடிகள் எல்லை மீறும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அதாவது பார்க், பீச், ரயிலில் எல்லை மீறும் போது மற்றவர் முகம் சுளிக்கும் அளவுக்கு நடந்து வருகின்றனர்.

24

கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு சிலரின் அநாகரீகச் செயல்கள் கல்வி நகருக்கே களங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலாங்குளம் குளக்கரை பகுதியில் உள்ள கழிவறையில் உல்லாசத்தில் ஈடுபட்ட காதல் ஜோடியை அங்கு கண்காணிப்பில் இருந்த காவலர்கள் விரட்டிய சம்பவமும் அரங்கேறியது.

34

இந்நிலையில் இன்று உக்கடத்தில் இருந்து சூலூர் நோக்கிச் சென்ற '30 சி' எண் கொண்ட அரசு நகர சொகுசுப் பேருந்தில், சக பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. ஓடும் பேருந்தில் அமர்ந்து இருந்த கல்லூரி மாணவர் ஒருவரின் மடியில், மாணவி ஒருவர் எவ்வித அச்சமும் இன்றி அமர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டே பயணித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பது கண்ட இடத்தில் கை வைப்பது என இளைஞரும் இளம்பெண்ணும் செய்யும் செயல்கள் எல்லை மீறியது.

44

​சுற்றி இருப்பவர்கள் யார்? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் ? என்ற அடிப்படை பொது அறிவு கூட இல்லாமல், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பார்த்து விடுவார்களோ ? என்ற அச்சமின்றி அந்த ஜோடி செய்த 'லவ் அட்ராசிட்டியை கண்டு வேதனை அடைந்த பயணி ஒருவர், தனது செல்போனில் அந்த சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories