பிரபல ஏழுமலையான் வெங்கடேஸ்வரா கோவிலுக்கு டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை ₹30 லட்சம் மதிப்பிலான 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்கினர். பக்தர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இந்த இரு சக்கர வாகனங்கள் ஸ்ரீவாரி கோவில் முன்பு நிறுத்தப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
TVS donates 25 Electric Scooter for Tirupati Ezhumalayan Temple
பின்னர் இந்த இருசக்கர வாகனங்களுக்கு பூஜை செய்து டிவிஎஸ் நிறுவன பிரதிநிதிகள் சாவியை டிடிடி இஓ ஏவி.தர்மரெட்டியிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் டிவிஎஸ் துணைத் தலைவர் செல்வம், டிவிஎஸ் பியூச்சர் மொபிலிட்டி விபி மனோஜ் சக்சேனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கடந்த 2016-ம் வருடம் சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும், சுந்தரம் கிளேட்டனும் மலைக்கோயிலுக்கு தலா ஒரு கோடி ரூபாயை டிமாண்ட் டிராப்டாக வழங்கியதாக கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது.