கையில் வெள்ளி கப்புடன் ரமலான் வாழ்த்து சொன்ன நதியா..வயசான தோற்றம் கொஞ்சம் கூட இல்லையே?

First Published | May 3, 2022, 1:02 PM IST

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகையை ஒட்டி நடிகை நதியா அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.

nadiya

நாயகி நதியாவுக்கென 80'ஸில் ரசிகர் பட்டாளமே இருந்தது.   கனவு கன்னியாகவெகு சில படங்களிலேயே மாறிய நதியா திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர்.

nadiya

1985ம் ஆண்டு வெளியான “பூவே பூச்சூடவா”  படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நதியா பின்னர்  உயிரே உனக்காக , நிலவே மலரே உள்ளிட்ட படங்களில் தோன்றினார்.

Tap to resize

nadiya

இதையடுத்து நதியாவின் கரியரில் ஒரு திருப்பு முனையாக  ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட படங்கள் அமைந்தன.

nadiya

ராஜாதி ராஜாவில் அப்பாவியாக இருக்கும் கிராமத்து ரஜினியின் மாமன் பெண்ணாக வரும் நதியாவின் நடிப்பு அன்று முதல் இன்று  வரை மிகப்பிரபலம்.

nadiya

மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக புகழ் பெற்ற நதியா 1988ம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். 

nadiya

திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்ட நதியா நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த நதியா, கடந்த 2004ம் ஆண்டு எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் 
ரவிக்கு அம்மாவாக நடித்தார். 

nadiya

பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நதியா, சோசியல் மீடியாவிலும் செம்ம ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது இளமை ததும்பும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

nadiya

இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதை தொடர்ந்து நடிகை நதியா வாழ்த்து கூறி க்யூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Latest Videos

click me!