ஷாக்கிங் நியூஸ்! திடீரென தமிழகத்தில் எகிறிய கொரோனா பாதிப்பு! எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு தெரியுமா?

Published : Apr 03, 2023, 08:49 AM IST

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
14
ஷாக்கிங் நியூஸ்! திடீரென தமிழகத்தில் எகிறிய கொரோனா பாதிப்பு! எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு தெரியுமா?

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. இதில், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்ததனர். இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். 

24

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

34

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று தமிழ்நாட்டில் 
ஒரு நாளில் 3,796 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 172 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு 35,97,118 ஆக உயர்ந்துள்ளது. 

44

தமிழகம் முழுவதும் 909 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் 99 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது. மேலும், உயிரிழப்பு எதுவும் இல்லை என சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 52 பேரும், செங்கல்பட்டில் 17, சேலம் 16, கோவை 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories