Chennai Airport: தங்கமாக மின்னும் சென்னை விமான நிலையம்! பிரத்யேக புகைப்படங்கள்!

First Published | Feb 27, 2023, 3:31 PM IST

தங்க நிறத்தில் மின்னும் பிரம்மாண்ட தூண்களுடன் பாரம்பரிய அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ள சென்னை விமான நிலைய புதிய முனையத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

புதிய முனையம்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் (NITB) விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்தப் புதிய முனையம் விமான நிலையத்தில் பயணிகளைக் கையாளும் வசதியை கணிசமாக மேம்படுத்தும். அதன் மூலம் பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரத்யேகப் படங்கள் வெளியீடு

சென்னை விமான நிலையத்தின் வடிவமைப்பு தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை உள்ளடக்கிய நவீன பாணியில் கட்டப்பட்டுள்ளதால் பலருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறது. விமான நிலைய அதிகாரிகள் புதிதாக வரவிருக்கும் முனையத்தின் கண்கவர் புகைப்படங்களைப் வெளியிட்டுள்ளனர்.

Tap to resize

சூரிய சக்தி பயன்பாடு

புதிய முனைய கட்டிடத்தில் துருப்பிடிக்காத எஃகு மூலம் எழுப்பப்பட்ட பிரமாண்டமான தூண்கள் உள்ளன. தங்க நிற பூச்சு ஒட்டுமொத்த முனையத்தையும் ஜொலிக்க வைக்கிறது. சூரிய ஒளி சக்தியை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சோலார் மின்சேமிப்பு அமைப்பும் இந்தப் புதிய முனையத்தில் இடம்பெற்றுள்ளது.

மெகா திட்டம்

புதிய முனையத்தில் 140 செக் இன் கவுன்டர்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் கட்டமாக 100 கவுன்டர்கள் பயன்பாட்டுக்கு வரும். எஞ்சியவை இரண்டாம் கட்டப் பணிகள் முடிந்ததும் பயன்பாட்டுக்கு வந்துவிடும். புதிய முனையம் இந்திய விமான நிலையங்களின் ஆணையம் முன்னெடுத்துள்ள மெகா திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்திற்கு ரூ.2,467 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாரம்பரிய முறையில் வடிவமைப்பு

இந்த முனையத்தை வடிவமைப்பதிலும் தமிழ்நாட்டின் பழமையான பண்பாட்டு அம்சங்கள் முக்கியப் பங்கு ஆற்றின என்று விமான நிலைய அதிகாரிகள் சொல்கிறார்கள். புதிய முனையத்தின் மேற்கூரை அலை போல அமைக்கப்பட்டிருப்பது தமிழகத்தின் பாரம்பரிய நடனக் கலையான பரத நாட்டியத்தின் அசைவுகளைப் பிரதிபலிப்பவை போல உள்ளன. புதிய முனையத்தின் நுழைவு வாயில் பகுதியும் கோயில் கோபுரத்தின் வடிவமைப்பை முன்னுதாரணமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

Latest Videos

click me!