74-வது குடியரசு தின விழா.. சென்னையில் கவனம் ஈர்த்த புகைப்படங்களை கண்டு ரசித்த ஆளுநர் முதல்வர்..!

Published : Jan 26, 2023, 03:25 PM ISTUpdated : Jan 26, 2023, 03:27 PM IST

நாட்டின் 74-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா காமராஜர் சாலையில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற விழா நடைபெற்றது.

PREV
110
74-வது குடியரசு தின விழா.. சென்னையில் கவனம் ஈர்த்த புகைப்படங்களை கண்டு ரசித்த ஆளுநர் முதல்வர்..!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே ஆளுநர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு முதலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். 

210

ஆளுநர் மற்றும் முதல்வருக்கு முப்படை தலைமை அதிகாரிகள், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிமுகம் செய்து வைத்தார்.

310

அவரைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவிற்கு வருகை தந்தார். ஆளுநருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 74-வது குடியரசு தின விழாவை ஒட்டி காலை 8 மணியளவில் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றினார்.

410

ஆளுநர் கொடியேற்றியவுடன் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

510

வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

610

அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வாழ்க என்று வாசகம் இடம்பெற்றிருந்த வாகனம் முதலில் வந்தது. 

710

பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கண்டு ரசித்தனர்.

810

தஞ்சாவூர்  தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்ததி மக்கள் தொடர்புத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய நிகழ்ச்சி. 

910

சென்னை மெரினாவில் 74வது குடியரசு தின கொண்டாட்டத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் இடம்பெற்ற அலங்கார ஊர்திகள்.

1010

முப்படையினர், கடலோர காவல் படையினர், காவல், சிறை, வனம், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பும், கடலோர காவல் படை,கடற்படை, விமானப்படையின் அலங்கார ஊர்திகளும் வலம் வந்தன.

Read more Photos on
click me!

Recommended Stories