சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர்கள் சித்ரா. இவருக்கு சுபிக்ஷா (22), வர்ஷா (19) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் சித்ரா தனது இரண்டு மகள்களுடன் தி.நகர் சென்று ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள தங்களது வீட்டுக்கு செல்வதற்காக 3 பேரும் தி.நகரில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வந்துள்ளனர்.