சென்னையில் ஊசிபோட்டு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்.. என்ன காரணம் தெரியுமா? சிக்கிய கடிதம்..!

First Published | Aug 23, 2023, 12:53 PM IST

சென்னையில் மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் ஊசி போட்டு தற்கொலை கொண்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் வசித்து வந்தவர் டாக்டர் கார்த்திக்(42).  இவர் சென்னை மருத்துவக்கல்லூரியில் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை பிரிவின் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 

இந்நிலையில், காத்தியை உறவினர் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்ட போதும் எடுக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரது தோழியை வீட்டிற்கு சென்று பார்க்கும் மாறி கூறியுள்ளனர். இதனையடுத்து,  கார்த்திக் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

Tap to resize

அப்போது கார்த்திக் அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அலறி கூச்சலிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது தற்கொலை தொடர்பாக  போலீசார் அவரது வீட்டை பரிசோதனை செய்த போது கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், எனது முடிவு என்னுடையது என்று எழுதப்பட்டிருந்தது. டாக்டர் தற்கொலை குறித்து தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos

click me!