சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், சமைப்பது, சாப்பிடுவது, குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்வது என அத்தியாவசிய பணிகளை கூட செய்யமுடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு இதே போல் ஒரு பெரு வெள்ளம் சென்னையை சூழ்ந்த நிலையில், தற்போது 5 வருடங்களுக்கு பின், அதே போன்ற நிலை சென்னை மக்களுக்கு நேர்ந்துள்ளது.
தி நகர் உள்ளிட்ட சென்னையில் இருக்கும் பல்வேறு இடங்களில் உள்ள சுரங்க பாதைகளில் தண்ணீர் நிற்பதால், அனைத்து போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளில், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடியே செல்கிறது.
மிகவும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களையும், மழையால் நீர் புகுந்ததால் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண மையங்களுக்கு செல்லும் மக்களை போலீஸ் அதிகாரிகள் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பத்திரமாக படகுகள் மூலம் மீட்டு வருகிறார்கள்.
எழுந்து நடக்க கூட முடியாத மூதாட்டி ஒருவரை, மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள்... பத்திரமாக கையில் தூக்கி கொண்டு வரும் காட்சியை இதில் பார்க்கலாம்.
பேருந்தின் பாதி அளவு நீர் எட்டியுள்ளது. அதே நேரம் இந்த இடங்களில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சென்றால் மூழ்கிவிடும் அபாயமும் உள்ளது.
சென்னை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் முழு முயற்சியில், தற்போது தமிழக அரசு இறங்கி உள்ளது. பல்வேறு இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணியும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.