600 நாட்களுக்குப் பின் பள்ளி திரும்பிய சிறார்களுக்கு ஆசிரியர்கள், தலைவர்கள் உற்சாக வரவேற்பு…!

First Published Nov 1, 2021, 10:14 AM IST

தமிழ்நாட்டில் சுமார் 600 நாட்களுக்குப் பின்னர் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ., மருத்துவர் எழிலன், மாணவர்களுக்கு இனிப்புகள், பரிசுப் பொருட்களை வழங்கி வரவேற்றார்.

கொரோனா ஊரடங்கில் மூடப்பட்டு கிடந்த பள்ளிகள் புதிதாக வன்னம் தீட்டி, வகுப்பறைகள் கிருமிநாசினிகளால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் உற்சாகத்துடன் பள்ளி திரும்பிய மாணவர்களுக்கு இனிப்புகள், பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

திருப்பூரில் மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 882 பள்ளிகள் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன. ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் இரண்டு தவனை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் நாள் பள்ளி வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

கோவையிலும் பள்ளி திரும்பும் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் முதல் நாளில் கம்பி மத்தாப்புகளை கொளுத்தி மாணவ, மாணவியர் உற்சாகம் அடைந்தனர்.

click me!