தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்!! பம்பரமாய் சுழன்று மக்களுக்காக பாடுபடும் முதல்வர்.. புகைப்பட தொகுப்பு!!

First Published | Nov 7, 2021, 6:24 PM IST

வடகிழக்குப் பருவமழை கொட்டி தீர்த்தத்தால், தற்போது சென்னை நகரமே தண்ணீரில் மிதந்து வருகிறது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில்... மக்கள் துயர் துடைக்கும் பணியில் முதல்வர் ஸ்டாலின் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார். இது குறித்த புகைபடத்தொகுப்பு இதோ...

stalin

வங்க கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

stalin

 இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் கடந்த 2015ம் ஆண்டிற்கு பிறகு நவம்பர் மாதத்தில் ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

Tap to resize

stalin

இதனால், சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் உள்ளே தண்ணீர் புகுந்தது. மேலும் பல இடங்களில் வாகனங்கள் நீந்தி செல்லும் அளவிற்கு தண்ணீர் உள்ளதால், சென்னையில் உள்ள மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்

.

stalin

தங்களுடைய அன்றாட தேவைகளுக்கு கூட மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு உடனடியாக மீட்பு பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

stalin

இன்று காலை, மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளான புரசைவாக்கம், பெரம்பூர், ரெட்டேரி உள்ளிட்ட பாகுதிகளில் மழையின் பாதிப்புகள் குறித்து முதல்வர் நேரடியாக ஆய்வு செய்தார்.  மின்சார விநியோகம், மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் மேலாண்மை  குறித்து அதிகாரிகளிடம்  கேட்டறிந்தார்.

stalin

பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்  என்று அங்கிருந்த பொது மக்களுக்கு ஆறுதல் அளித்தார்.  இதனையடுத்து, திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனே செய்திட உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்டு உணவில்லாமல் தவித்து வரும்... மக்களுக்கு பல்வேறு இடங்களில் அவர்களுக்கு தேவையான உணவு, அரசி, பருப்பு , பெட்ஷீட் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

stalin

மக்களுக்கு நல்ல முறையில் உணவுகள் வழங்கப்படுகிறதா? என்பதை பார்வையிட்டது மட்டும் இன்றி... அவரே தன்னுடைய கைகளால் உணவு பரிமாறி ஆறுதல் கூறினார்.

stalin

தற்போது மக்களுக்காக களத்தில் இறங்கி உதவி செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

stalin

மேலும் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியும் தீவிரமாக முடக்கிவிட பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!