Chennai Metro: மெட்ரோ பயணிகளே உஷார்! இனி உரக்கப் பேசினாலும்.. செல்போனில் பாட்டு கேட்டால் ரூ.2,500 அபராதம்..!

Published : Jul 10, 2026, 01:21 PM IST

Chennai Metro Passengers: போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உதவும் சென்னை மெட்ரோவில், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சக பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் ஸ்பீக்கர் பயன்படுத்தினால் அபராதம் உயர்வு.

PREV
15

சென்னையின் பிரதான சாலைகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய மெட்ரோ ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள் தற்போது தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும், வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது பயணிகளுக்காக பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயிலில் விதிமீறலில் ஈடுபடும் பயணிகளுக்கு அபராதத் தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

25

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில்: சென்னை மெட்ரோ இரயில் பயண ஒழுங்குமுறைகள் விதிகளை மீறி மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் மெட்ரோ இரயில் பயண ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும் அமைதிக்கும்மதிப்பளிக்குமாறு அனைத்துப் பயணிகளையும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. மெட்ரோ இரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளுக்குத்தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோதண்டனைக்குரிய குற்றமாகும்.

35

குறிப்பாக அலைபேசியில் உரத்த குரலில் உரையாடுதல், செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கி (Headphones) இன்றி இசை அல்லதுவீடியோக்களைப் பார்ப்பது. அலைபேசியில் மெட்ரோ இரயில்களிலும் வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துதல் (Speaker mode)மேற்கண்ட செயல்கள் மூலம் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் அலைபேசிகளைப் பயன்படுத்துவதும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

45

குறிப்பாக அலைபேசியில் உரத்த குரலில் உரையாடுதல், செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கி (Headphones) இன்றி இசை அல்லதுவீடியோக்களைப் பார்ப்பது. அலைபேசியில் மெட்ரோ இரயில்களிலும் வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துதல் (Speaker mode)மேற்கண்ட செயல்கள் மூலம் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் அலைபேசிகளைப் பயன்படுத்துவதும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

55

மேலும், விதிகளை மீறும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோவளாகத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, சக பயணிகளின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் செவியில் பொருத்திகொள்ளும் ஒலிபெருக்கியை (Headphones) பயன்படுத்துமாறும், மெட்ரோ இரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டைத் தவிர்க்குமாறும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories