ஐபிஎல் தொடரில் அசத்தும் ஆர்சிபி
விராட் கோலியின் மிகச்சிறப்பான பேட்டிங்கால் ஆர்சிபி அணியும் புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் வீற்றிருக்கிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்றிருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தொடர் வெற்றிகளை குவித்து வரும் நிலையில், இந்த முறை கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு சென்று முதன்முறையாக கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்
இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனத்துக்கு பேட்டியளித்த விராட் கோலி, தனது கிரிக்கெட் வாழ்க்கை, ஐபிஎல் அனுவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். இந்த பேட்டியின்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் உங்களுக்கு பிடித்த பாடல் எது? என்று கேட்கிறார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி, ''இந்த பதில் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எனக்கு தற்போது மிகவும் பிடித்த பாடல், "நீ சிங்கம் தான்" என்று கூறியுள்ளார்.