ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே அணியில் அஸ்வினை ஓரங்கட்டியதற்கு ஹர்பஜன் சிங் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அஸ்வினின் அனுபவத்தைப் பயன்படுத்தாமல், அவரை நீக்கியதால் சிஎஸ்கே தோல்வியடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான நிலையை சந்தித்து வருகிறது. 10 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகளுடன், பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியே தள்ளப்பட்டுள்ளது. ஐந்து முறை சாம்பியனான அணி இந்த சீசனில் வெளியேற்றப்பட்ட முதல் அணி என்ற அவமானத்தை அடைந்துள்ளது. தொடரின் பாதியில் கேப்டன் ஆக்கப்பட்ட தோனி உள்பட பலரது ஆட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை. இதனால் சிஎஸ்கே தொடர் தொல்விகளைச் சந்தித்துள்ளது.
25
Harbhajan Singh slams CSK
ரவிச்சந்திரன் அஸ்வின்:
சிஎஸ்கே முதல் அணியாக வெளியேறியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது, ரவிச்சந்திரன் அஸ்வின் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அவருக்காக சிஎஸ்கே ரூ.9.75 கோடி செலவிட்டது. இந்த சீசனில் அஸ்வின் ஏழு போட்டிகளில் பங்கேற்று ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதனால் அவர் கடந்த 3 போட்டிகளில் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார்.
35
CSK captain MS Dhoni
ஹர்பஜன் சிங் விமர்சனம்:
இந்நிலையில், சிஎஸ்கே அணிக்காக விளையாடிய முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அஷ்வினின் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிய சிஎஸ்கே அணி நிர்வாகத்தை விமர்சித்துள்ளார். புதன்கிழமை பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து இந்த விமர்சனத்தை ஹர்பஜன் வெளியிட்டுள்ளார்.
"சென்னை அணி ஆடுகளத்தின் அடிப்படையில் அணியைத் தேர்வு செய்யவில்லை. நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மூவரும் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஒன்றாக விளையாடியிருந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தப் போட்டியை வென்றிருக்க முடியும். அஸ்வினை உட்கார வைப்பதற்காக நீங்கள் ரூ.10 கோடி கொடுக்கவில்லை. அவர் ஏன் விளையாடவில்லை என்று எனக்குத் தெரியவில்லை, அவர் யாரோ ஒருவருடன் சண்டையிட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது" என்று ஹர்பஜன் கூறினார்.
55
Ashwin
அஸ்வினுக்கு மட்டும் புறக்கணிப்பா?
அஸ்வின் மட்டும் மோசமாக விளையாடவில்லை என்றும் குறிப்பிட்ட ஹர்பஜன், அவரைப் போல செயல்பட்ட மற்றவர்களுக்கு தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கும் நிலையில் அவர் மட்டும் நீக்கப்பட்டது பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். "அவர் மட்டும் சிறப்பாக செயல்படவில்லை என்று சொல்ல முடியாது. மற்றவர்களும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இருந்தாலும் அவர்கள் இன்னும் விளையாடி வருகின்றனர். ஆனால் அஷ்வினுக்கு அணியில் இல்லை. சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளம் இருந்ததால், பஞ்சாபிற்கு எதிராக அவர் விளையாடியிருக்க வேண்டும்" என்று ஹர்பஜன் வலியுறுத்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சனிக்கிழமை தனது அடுத்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறும்.