இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை நீக்கிய விராட் கோலி! கடைசியில் வந்த 'ஸ்வீட்' ட்விஸ்ட்!

Published : Apr 10, 2025, 03:26 PM ISTUpdated : Apr 10, 2025, 03:27 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விளம்ப்ர வீடியோக்களை நீக்கியுள்ளார். ஆனால் கடைசியில் ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைத்தார்.  

PREV
14
இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை நீக்கிய விராட் கோலி! கடைசியில் வந்த 'ஸ்வீட்' ட்விஸ்ட்!

Virat Kohli Revamps Instagram Page: கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி. கிரிக்கெட்டின் கிங் எனப்படும் விராட் கோலி செய்யாத சாதனைகளே இல்லை எனலாம். சச்சின் டெண்டுல்கர், தோனிக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் முகமாக தெரிபவர் விராட் கோலி. தனது அசாத்திய திறமை மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற கோலி, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக விளையாட்டில் மிகவும் செல்வாக்கு பெற்ற வீரராக விளங்கி வருகிறார்.

24
Virat Kohli Revamps Instagram Page

இதனால் எக்ஸ், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூகவலைத்தளங்களிலும் விராட் கோலி பிசியாக வலம் வருகிறார். விளையாட்டு வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை பாலோயர்ஸ்களாக கொண்டவர் கோலி தான். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள அவர்  தன்னுடைய ஜிம் வொர்க் அவுட் வீடியோ உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்து வந்தார். மேலும் அவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக பல்வேறு பிராண்ட்களை விளம்பரம் செய்து அதன்மூலமாகவும் வருமானம் ஈட்டி வந்தார்.

இதற்கிடையே விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பிராண்ட் விளம்பரங்கள் அனைத்தையும் நீக்கினார். இதனால் அவர் பிராண்ட் ஒப்பந்தங்களிலிருந்து முற்றிலுமாக விலகுகிறாரா? இல்லை இன்ஸ்டாகிராமில் இருந்து விலகப் போகிறாரா? என ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்நிலையில், கோலி இன்ஸ்டாகிராமின் வீடியோ பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து பிராண்ட் விளம்பரங்களையும் ரீல்ஸ் பக்கங்களுக்கு மாற்றியமைத்துள்ளார்.

CSK vs KKR: உங்க சேவை போதும்! முக்கிய ஃபாஸ்ட் பவுலரை நீக்கிய சிஎஸ்கே! பிளேயிங் லெவன்!

34
Virat Kohli Instagram

இதன்பிறகே ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இனி விராட் கோலியின் பிராண்ட் விளம்பரங்கள் அனைத்தும் இன்ஸ்டா ரீல்ஸ் பக்கத்தில் மட்டுமே வெளியாகும் என்றும் மெயின் வீடியோ பக்கத்தில் வெளியாகாது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மெயின் வீடியோ பக்கத்தில் இனிமேல் கோலியின் ஜிம் வொர்க் அவுட் உள்ளிட்ட அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த புகைப்படங்கள், வீடியோக்களே வெளியாகும். இந்த மாற்றம் குறித்து கோலி அல்லது அவரது குழுவினரிடமிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வரவில்லை என்றாலும், இந்த நடவடிக்கை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

44
Virat Kohli, Cricket

சமூக ஊடகங்கள் பிராண்ட் விளம்பரங்களுக்கு முக்கிய பங்கு வகிக்கும் ஒரு காலத்தில், வணிக உள்ளடக்கத்திலிருந்து வாழ்க்கை முறை புதுப்பிப்புகளைப் பிரிக்கும் கோலியின் முடிவு, ரசிகர்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உயர்மட்ட பிரபலங்கள் ஆன்லைனில் பணமாக்குதலுடன் நம்பகத்தன்மையை எவ்வாறு சமநிலைப்படுத்துகிறார்கள் என்பதில் பரந்த மாற்றத்தையும் இந்த நடவடிக்கை பிரதிபலிக்கக்கூடும்.

தன்னுடைய பிராண்ட் விளம்பரங்கள் ரசிகர்களை அதிகம் தொந்தரவு செய்யக்கூடாது. தன்னுடைய ஜிம் வொர்க் அவுட், பயிற்சி வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ஆர்வமுடன் பார்க்கும் ரசிகர்களின் நம்பிக்கையை சீர்குலைக்க கூடாது எனக்கருதி விராட் கோலி இந்த முடிவை எடுத்துள்ளார்.

அம்பயருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரியான் பராக்! வீரர்கள் ஷாக்! என்ன நடந்தது?
 

Read more Photos on
click me!

Recommended Stories