ஒரே ஒரு மாற்றமாக கடந்த இரண்டு போட்டியிலும் சொதப்பிய அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர் முகேஷ் செளத்ரி அணியில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக மீடியம் ஃபாஸ்ட் போடுவது மட்டுமின்றி பேட்டிங்கும் செய்யும் அன்ஷுல் காம்போஜ் இடம்பெற இருக்கிறார். அஸ்வின் நன்றாக பவுலிங் போடவில்லை என்றாலும் சென்னை சேப்பாக்கம் மைதானம் ஸ்பின்னுக்கு உகந்தது என்பதால் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங்கில் ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே களமிறங்குகிறனர். ருத்ராஜ் கெய்க்வாட் வழக்கம்போல் 3வது இடத்தில் பேட்டிங் செய்கிறார். இதன்பிறகு விஜய் சங்கர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா விளையாட உள்ளனர். கடைசியில் தோனி, பேட்டிங் செய்ய இருக்கிறார். ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரை ஜடேஜா, நூர் அகமது, அஸ்வின் உள்ளனர்.