ரஞ்சி டிராபி கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக பேட்டிங்கில் சொதப்பிய விராட் கோலி, பேட்டிங் மற்றும் கேப்டன்சியில் சொதப்பிய ரோகித் சர்மா மீது ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பாயந்தனர். இந்தியாவில் ரஞ்சி டிராபி உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.
முன்பெல்லாம் இந்திய வீரர்கள் பெரிய நாடுகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார்கள். இது அவர்களுக்கு பெரிய போட்டிகளை எதிர்கொள்ள உதவியாக இருக்கும். ஆனால் இப்போது இந்திய அணி வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது கிடையாது.
இதனால் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அப்படி விளையாடாத வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர்.