
Varun Chakravarthy says he was threatened in 2021: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டபோது ஏற்பட்ட கஷ்டங்களைப் பற்றி விரிவாக பேசியுள்ளார். இந்திய அணியின் முன்னணி ஸ்பின் பவுலரான வருண் சக்ரவர்த்தி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். நியூசிலாந்துக்கு எதிராக லீக் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி, நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான தோல்வியை தழுவியது. அப்போது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வருண் சக்கரவர்த்தியின் பவுலிங் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அந்த காலக்கட்டத்தில் துபாயில் இருந்து இந்தியா திரும்பி வந்துவிடக்கூடாது என்று தனக்கு மிரட்டல்கள் வந்ததாக வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு யூடியூப் நிகழ்ச்சியில் பேசிய வருண் சக்கரவர்த்தி, டி20 உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தன்னால் சரியாக விளையாட முடியவில்லை என்றும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறினார்.
“அது எனக்கு மிகவும் கடினமான நேரம். உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் என்னால் சரியாக விளையாட முடியவில்லை. விக்கெட்டுகள் வீழ்த்த முடியாததால் மன அழுத்தத்திற்குச் சென்றுவிட்டேன்” என்று வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
இந்தியா தோற்றதற்கு தான் காரணம் என்றும், தன்னை இந்தியாவுக்குத் திரும்ப வரக்கூடாது என்று சிலர் மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். “2021 உலகக் கோப்பைக்குப் பிறகு எனக்கு மிரட்டல் அழைப்புகள் வந்தன. சிலர் என் வீட்டிற்கு வந்தார்கள், என்னைத் துரத்தினார்கள். சில நேரங்களில் நான் ஒளிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அப்போது நடந்ததையும், இப்போது கிடைக்கும் பாராட்டுகளையும் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025: சிக்சர் மழை பொழிந்து அதிரடியில் கலக்கப்போகும் 6 வீரர்கள்!
இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல்-இல், உள்ளூர் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடியதால் தான் வருண் சக்ரவர்த்தி மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினார். அப்போதிருந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இதற்காக தனது தினசரி வழக்கத்தை மாற்றிக் கொண்டதாக அவர் கூறினார்.
“2021க்குப் பிறகு நான் நிறைய மாற்றங்களைச் செய்தேன். எனது தினசரி வழக்கம், பயிற்சியை மாற்றிக் கொண்டேன். நான் இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்” என்று வருண் பேசியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியில் மூன்று போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் எடுத்தது பற்றி வருண் சக்ரவர்த்தி கூறுகையில், "சாம்பியன்ஸ் டிராபி எனக்கு நிறைய நம்பிக்கையை அளித்தது. நான்கு போட்டிகள் மட்டுமே விளையாடினேன். ஆனால் இவ்வளவு வெற்றி கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று வருண் கூறினார். சாம்பியன்ஸ் டிராபியில் முதல் இரண்டு போட்டிகளில் பெஞ்சில் இருந்தபோதும் பயிற்சி செய்து கொண்டே இருந்ததாக வருண் சக்ரவர்த்தி கூறினார். கௌதம் கம்பீர் தன்னுடன் பேசி போட்டிக்குத் தயாராக இருக்கும்படி சொன்னதாகக் கூறியுள்ளார்.
சிஎஸ்கே முதல் கேகேஆர் வரை! 10 ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!