ஐபிஎல் 2025: சிக்சர் மழை பொழிந்து அதிரடியில் கலக்கப்போகும் 6 வீரர்கள்!

Published : Mar 15, 2025, 08:12 AM IST

ஐபிஎல் திருவிழா கோலாகலமாகத் தொடங்க உள்ள நிலையில், சிக்சர் மழை பொழிந்து அதிரடியில் கலக்கப்போகும் 6 வீரர்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். 

PREV
17
ஐபிஎல் 2025: சிக்சர் மழை பொழிந்து அதிரடியில் கலக்கப்போகும் 6 வீரர்கள்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஐபிஎல் மார்ச் 22 அன்று முதல் தொடங்கி மே 25 வரை நடைபெறும்.  2008-ல் நடந்த முதல் தொடரிலிருந்து இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒவ்வொரு சீசனிலும், பேட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பல வீரர்கள் தொடர்ந்து ரன் குவிப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அந்த வகையில் ஐபிஎல் 2025-ல் அதிக ரன் குவிக்க வாய்ப்புள்ள ஆறு வீரர்களைப் பற்றி பார்க்கலாம்.

27
விராட் கோலி

விராட் கோலி கடந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை வென்றார். ஐபிஎல் 2024ல், கோலி 741 ரன்கள் குவித்தார். கடந்த இரண்டு சீசன்களில் மட்டும் கோலி 600 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஏற்கெனவே சாம்பியன்ஸ் டிராபியில் அசத்திய நிலையில், கோலி இப்போது சூப்பர் பார்மில் உள்ளார். ஆகவே ஐபிஎல் 2025 சீசனில் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்க அவர் காத்திருக்கிறார்.

37
சுப்மன் கில்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஐபிஎல் 2023‍ல் அதிக ரன் குவித்த வீரரருக்கான ஆரஞ்சு தொப்பி வென்றார். அந்த தொடரில் அவர் 890 ரன்கள் குவித்தார். கடந்த 2024 ஐபிஎல் சீசனில் சுப்மன் கில் 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். குஜராத் அணியின் கேப்டனாகவும் இருக்கும் நிலையில், அவரின் பொறுப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இந்த முறையும் அதிக ரன்கள் குவிக்க அவர் ஆவலுடன் இருக்கிறார். 

சிஎஸ்கே முதல் கேகேஆர் வரை! 10 ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!

47
ரச்சின் ரவீந்திரா

நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார். ரச்சின் கடந்த சீசனில் 222 ரன்கள் குவித்தார். அண்மையில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் 2 சதங்களுடன் 263 ரன்கள் குவித்து அசத்தினார். சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் ஸ்பின்னுக்கு உகந்த நிலையில், ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொள்ளும் ரச்சின், சிக்ஸர்களை பறக்க விட்டு அசத்த காத்திருக்கிறார்.

57
யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் 2025 சீசனில் அதிக ரன் குவிக்க வாய்ப்புள்ளது. ஜெய்ஸ்வால் 2023 சீசனில் 625 ரன்கள் குவித்தார். கடந்த இரண்டு சீசன்களில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். சமீப காலமாக அவர் குறைந்த ஓவர் போட்டிகளில் விளையாடாவிட்டாலும் நல்ல பார்மில் தான் இருக்கிறார். தொடக்க வீரராக களமிறங்குவார் என்பதால் அதிரடியில் வெளுத்துக்கட்ட ஆர்வமுடன் இருக்கிறார். 

 

 

67
அபிஷேக் சர்மா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட்டில் ஒரு முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். கடந்த மாதம் மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அதிவேகமாக 135 ரன்கள் விளாசி மலைக்க வைத்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் 484 ரன்கள் குவித்தார். இவரும், டிராவிஸ் ஹெட்டும் தான் இப்போது ஐபிஎல்லில் சிறந்த ஜோடிகளாக உள்ளனர். மிக எளிதாக சிக்சர்களை அடிக்கக்கூடியவர் என்பதால் அபிஷேக் சர்மாவின் பேட்டில் இருந்து சிக்சர் மழையை எதிர்பார்க்கலாம்.
 

77
ஷ்ரேயாஸ் ஐயர்

புதிதாக நியமிக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சிறப்பாக விளையாடினார். கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் 351 ரன்கள் குவித்தார். இவரை ஐபிஎல் 2025 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் ரூ.26.75 கோடிக்கு எடுத்தது. பாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்ளும் ஷ்ரேயாஸ் ஐயர் அதிக ரன்கள் குவிக்கும் வீரர்களில் ஒருவராக இருப்பார். 

ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல்லில் விளையாடுவாரா? மும்பை இந்தியன்ஸ் அணியில் எப்போது இணைவார்?

Read more Photos on
click me!

Recommended Stories