Century at the age of 14! Vaibhav Suryavanshi Man of the Match Interview: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 209 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் வீரர் 14 வயதே சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 38 பந்துகளில் 11 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசி புதிய வரலாறு படைத்தார்.
24
Vaibhav Suryavansh, IPL, Cricket
பல சாதனைகளை படைத்த வைபவ் சூர்யவன்ஷி
14 வயது 32 நாட்களே ஆன வைபவ் சூர்யவன்ஷி இளம் வயதில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த சீசனில் அதிவேகமாக அரைசதம் அடித்த முதல் வீரர், இந்த ஐபிஎல் சீசனில் அதிவேக சதம் என பல்வேறு சாதனைகளை அவர் தன்வசமாக்கினார். பள்ளிப்படிப்பு படிக்கும் வயதில் மிகப்பெரும் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது கன்னி சதம் குறித்து வைபவ் சூர்யவன்ஷி மனம்திறந்து பேசியுள்ளார். நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய வைபவ் சூர்யவன்ஷி, ''இது மிகவும் நன்றாக இருக்கிறது. ஐபிஎல்லில் எனது மூன்றாவது இன்னிங்ஸில் இது எனது முதல் சதம். கடந்த மூன்று-நான்கு மாதங்களாக நான் பயிற்சி செய்து வருவதற்கு பலன் கிடைத்துள்ளது. நான் மைதானத்தை அவ்வளவாகப் பார்ப்பதில்லை, பந்தில் கவனம் செலுத்துகிறேன். ஜெய்ஸ்வாலுடன் பேட்டிங் செய்வது எனக்கு நம்பிக்கையைத் தருகிறது'' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வைபவ் சூர்யவன்ஷி, ''ஏனென்றால் அவர் மிகவும் நேர்மறையாக இருக்கிறார், எனக்கு ஆலோசனை வழங்குகிறார். எனவே அவருடன் பேட்டிங் செய்வது எளிதாகிறது. ஐபிஎல்லில் சதம் அடிப்பது ஒரு கனவு போன்றது. பந்துவீச்சாளர்களை பார்த்து எனக்கு பயம் இல்லை. நான் அதைப்பறி யோசிக்கவில்லை. நான் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்தே கவனம் செலுத்துகிறோம்'' என்றார்.
44
Vaibhav Suryavanshi ans Jaiswal
வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஜெய்ஸ்வால்
வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் குறித்து பேசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், ''இது நம்பமுடியாத இன்னிங்ஸ், நான் பார்த்ததிலேயே சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. அவர் (சூர்யவன்ஷி) நீண்ட காலமாக நமக்காக இதைச் செய்வார் என்று நம்புகிறேன். நான் அவரிடம் இன்று நம்பமுடியாத அளவுக்குத் தொடர்ந்து விளையாடுங்கள் என்று கூறினேன். அதன்படி அவர் அற்புதமான ஷாட்களை விளையாடினார். நன்றாகப் பயிற்சி செய்கிறார், பெரிய ஷாட் அடிகக் கடினமாக உழைக்கிறார். அவருக்கு ஆட்டமும் மனநிலையும் இருக்கிறது, அவருக்கு எல்லா அதிர்ஷ்டமும் கிடைக்க வாழ்த்துகிறேன்''என்று தெரிவித்தார்.