இளம் வயதில் சதம் அடித்த முதல் வீரர் வைபவ் சூர்யவன்ஷி – 14 வயதில் 11 சிக்ஸருடன் 101 ரன்கள்!

Published : Apr 28, 2025, 11:39 PM IST

Vaibhav Suryavanshi : ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இளம் வயதில் 14 வயது 32 நாட்களில் ஐபிஎல் தொடரில் சதம் அடித்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார்.

PREV
15
இளம் வயதில் சதம் அடித்த முதல் வீரர் வைபவ் சூர்யவன்ஷி – 14 வயதில் 11 சிக்ஸருடன் 101 ரன்கள்!

Vaibhav Suryavanshi : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் ஐபிஎல் 2025 தொடரின் 47ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 84 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லர் 50 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார்.

25

இதைத் தொடர்ந்து 210 ரன்களை இலக்காக கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி குஜராத் டைட்டன்ஸ் வீரர் இஷாந்த் சர்மாவின் ஒரே ஓவரில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 26 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

35

17 பந்துகளில் 50 ரன்கள் குவித்து சாதனை:

சாதனை 1: அவர் 14 வயது 32 நாட்கள் ஆன நிலையில் இந்த போட்டியில் 17 பந்துகளில் 50 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

சாதனை 2: இந்த சீசனில் அதிவேகமாக அரைசதம் அடித்த முதல் வீரர்

சாதனை 3: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த 2ஆவது வீரர்

சாதனை 4 : குஜராத் அணிக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்

சாதனை 5: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதி அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

45

தொடர்ந்து விளையாடிய அவர் கரீம் ஜனத்தில் ஒரே ஓவரில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசித்தள்ளினார். இதன் மூலமாக ராஜஸ்தான் 10 ஓவர்களில் 144 ரன்கள் எட்டியது. இதைத் தொடர்ந்து 94 ரன்களில் இருந்த போது சிக்ஸர் விளாசி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் சதம் விளாசிய முதல் வீரர என்ற சாதனையை படைத்தார். மேலும், அதிவேகமாக சதம் அடித்த 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

55

அவர் 35 பந்துகளில் சதம் விளாசி இந்த சாதனையை படைத்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதம்:

30 பந்துகள் – கிறிஸ் கெயில் - RCB vs PWI Bengaluru 2013

35 பந்துகள் வைபவ் சூர்யவன்ஷி - RR vs GT Jaipur 2024

37 பந்துகள் யூசுப் பதான் - RR vs MI Mumbai 2010

38 பந்துகள் டேவிட் மில்லர் - PBKS vs RCB Mohali 2013

இளம் வயதில் டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்தவர்கள் பட்டியல்:

14 வயது 32 நாட்கள் - வைபவ் சூர்யவன்ஷி - RR vs GT 2024

18 வயது 118 நாட்கள் – விஜய் ஜோல் - Maharahtra vs Mumbai 2013

18y வயது 179 நாட்கள் – பெர்வேஸ் ஹூசைன் எமோன் - Barishal vs Rajshahi 2020

18 வயது 280 நாட்கள் குஸ்டாவ் மெக்கீன் - France vs Switzerland 2022

இறுதியாக இந்தப் போட்டியில் சூர்யவன்ஷி 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார. அவர் 38 பந்துகளில் 11 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories