நான் செத்து இருப்பேன் கோல்பெர்க் கூட நெடந்த அந்த மேட்ச்ல கொஞ்சம் அசந்து இருந்தா முடிஞ்சு : WWE அண்டர்டேக்கர்

First Published | Nov 24, 2020, 10:05 AM IST

அண்டர்டேக்கர் என்றாலே நம் நினைவுக்குள் அழகாக இருள் சேர்ந்துகொள்ளும், க்ரேவ் யார்ட் இசை டங் டங் என்னும் மணி ஓசையுடன் நம்மை அச்சப்படுத்தும், சிறுவயதில் பேய்ப்படம் என்றாலே குழந்தைகள் பயப்படுவார்கள்.
 

WWE சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான அண்டர்டேக்கரின் இறுதி பிரியாவிடை சர்வைவர் சீரிஸ் 2020ல் இடம்பெற்றது.
அண்டர்டேக்கர் ஏற்படுத்திய அந்தத் தாக்கம் என்ன என்பது சிறு பிள்ளை பிராயத்திலிருந்து இந்த ஷோவை பார்ப்பவர்களுக்குப் புரியும். வளர்ந்த பிறகு இந்தப் போட்டியே பொய், இது ஒரு பித்தலாட்டம், நம்மை பார்க்க வைப்பதற்காக இவர்கள் அடிவாங்குகிறார்கள், அவர்கள் அடித்துக்கொள்வது உண்மை இல்லை என்பதை உணர்ந்த தருணத்திலும் கூட 'அண்டர்டேக்கருக்கு ஏழு உசுரு இல்லை' என்பதை நம்புவது பலருக்கு சிரமமாக இருந்தது.
Tap to resize

அண்டர்டேக்கருக்கு ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் வந்ததற்கு அந்த உயிர்தான் காரணமாக இருக்கிறது. 'தி லாஸ்ட் ரைட்' ஆவணப்படத்தில், கடந்த ஆண்டு கோல்பெர்க்கிற்கும் அண்டர்டேக்கரும் நடைபெற்ற சண்டையில் கரணம் தப்பினால் மரணம் என்னும் அளவிற்கு உயிரை பிடித்துக்கொண்டு தப்பித்துள்ளார்
சாவிற்கு மிக அருகில் சென்று வந்த அந்த மேட்ச்சிலிருந்துதான் ஓய்வு எடுக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை தான் உணர்ந்ததாகவும் தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை நிராதரவாக நிற்க விட மனம் வரவில்லை என்றும் எமோஷனலாக பேசியுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக மல்யுத்தத்தின் மூலம் ரசிகர்களை மிரள வைத்த அண்டர்டேக்கர், தற்போது சாவின் விழிம்பு வரை சென்று மீண்டும் ஒரு முறை பிறந்திருக்கிறார் என்பதை உணர்கையில் உண்மையிலேயே அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர் என்று இன்னும் 90ஸ் கிட்ஸ் மனம் நம்பிக்கொண்டே இருக்கிறது

Latest Videos

click me!