அமெரிக்கா புறப்படும் ஒலிம்பிக் கொடி–பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் டாம் குரூஸிடம் வழங்கப்பட்ட ஒலிம்பிக் கொடி

First Published | Aug 12, 2024, 11:34 AM IST

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் நிறைவு விழா இன்று 12ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில், ஒலிம்பிக் கொடியானது அமெரிக்கா நடிகர் மற்றும் தயாரிப்பாளரான டாம் குரூஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

Paris 2024 Olympics Closing Ceremony

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்றது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 32 வகையான விளையாட்டுகளில் 48 பிரிவுகளில் 329 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.

Paris 2024 Olympics Closing Ceremony

இதில், அமெரிக்கா மட்டுமே 40 தங்கப் பதக்கம், 44 வெள்ளிப் பதக்கம் மற்றும் 42 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 126 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. இதே போன்று சீனா 40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலம் என்று மொத்தமாக 91 பதக்கங்களை கைப்பற்றி 2ஆவது இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என்று 6 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 71ஆவது இடம் பிடித்துள்ளது.

Latest Videos


Paris 2024 Olympics Closing Ceremony

இந்த நிலையில் தான் கிட்டத்தட்ட 16 நாட்களுக்கு பிறகு பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது நேற்று நிறைவு பெற்றது. 33ஆவது ஒலிம்பிக் தொடருக்கான நிறைவு விழா ஆகஸ்ட் 12 ஆம் தேதி (இன்று) நள்ளிரவு 12.30 மணிக்கு பாரிஸில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

Paris 2024 Olympics Closing Ceremony

இந்த நிறைவு விழாவானது வெடி, இசைக் கச்சேரி, ஹாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான டாம் குரூஸின் ஸ்டண்ட் நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலமாக முழுமை பெற்றது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் நிறைவு விழாவில் கிட்டத்தட்ட 9000 விளையாட்டு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் அரங்கு முழுவதும் கூடியிருந்தனர்.

Paris Olympics 2024 Closing Ceremony

கிட்டத்தட்ட 2 மணி நேரம் நீடித்த இந்த நிறைவு விழாவில் அமெரிக்க பாடகர்களான H.E.R மற்றும் Snoop Dogg, இங்கிலாந்து பாடகர் Billie Eilish மற்றும் 70,000 க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டிருந்த ஸ்டேட் டி பிரான்சில் பிரெஞ்சு கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் கண்டனர். பின்னர், 205 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மைதானத்திற்குள் தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்தினர்.

வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் மகளிருக்கான மராத்தான் போட்டியுடன் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் நிறைவு விழாவில் மராத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பைல்ஸிடம் இருந்து ஒலிம்பிக் கொடியை பெற்றுக் கொண்ட குரூஸ், பாரிஸ் தெரு முழுவதும் பைக்கில் எடுத்துச் சென்று பின்னர் அங்கிருந்து சரக்கு விமானம் மூலமாக லாஸ் ஏஞ்சல்ஸுக்கு புறப்பட தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Paris 2024 Olympics Closing Ceremony

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரைத் தொடர்ந்து வரும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரானது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஒலிம்பிக் கொடியானது குரூஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

click me!