சார் அம்புட்டு காசுக்கு நாங்க எங்க போவோம்.. சங்கமே அபாரதத்துல தான் ஓடுது பிக் பாஷ் யில் விழி பிதுங்கிய அணி..!

ஐபிஎல் தொடர் நடைபெறுவது போல ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் (Big Bash League) என்ற டி 20 போட்டிகள் மிகவும் பிரபலம்
 

இந்த போட்டியின் போது சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஹெய்லி சில்வர் ஹோல்ம்ஸ் என்ற வேகப்பந்து வீராங்கனை இடம்பெற்றிருந்தார். அவர் காயம் காரணமாக, கடைசி சில போட்டிகளில் அணியில் இடம்பெறாமல் போயிருந்தார்
அவரை மீண்டும் அணியில் அதிகாரபூர்வமாக சேர்க்க, சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஒப்புதல் எதுவும் பெறாத நிலையில் நேற்றைய போட்டியில் அவர் அணியில் இடம்பெற்றிருந்தார்.

இதனையடுத்து போட்டி தொடங்கிய சில மணித்துளிகளிலேயே தங்களது தவறை அறிந்து கொண்ட சிட்னி சிக்ஸர்ஸ் அணி, பின்னர் சுதாரித்து கொண்ட நிலையில், அதன்பின் ஹெய்லியை பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என எதிலும் பயன்படுத்தவில்லை
எனினும், சிட்னி அணி செய்த தவறுக்காக அந்த அணிக்கு சுமார் 18 லட்சம் ரூபாய் (25,000 டாலர்கள்) அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அணியே தவறை ஒப்புக் கொண்டதால்,
அந்த அபராத தொகையில் 12 மாதங்களுக்கு 11 லட்ச ரூபாயை நிறுத்தி வைத்தும் கருணை காட்டியுள்ளது பிக் பாஷ் தொடர் நிர்வாகம்.

Latest Videos

click me!