ரோகித் சர்மாவால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சரிவு! சவுரவ் கங்குலி காட்டம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, ரோகித் சர்மா தலைமையின் கீழ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சரிவு குறித்து கவலை தெரிவித்தார்.

Sourav Ganguly says Rohit Sharma caused the Indian team to decline in Test cricket ray

Sourav Ganguly Questioned Rohit Sharma: இந்திய அணி முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி, தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சரிவு குறித்து கேள்வி எழுப்பினார். ரோஹித் சர்மா தலைமையின் கீழ், இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்தது. கடந்த ஐந்து மாதங்களில் இந்தியா 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 

ரோகித் சர்மா தலைமையிலான அணி பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை வென்றது. ஆனாலும் இந்திய அணி 24 ஆண்டுகளில் முதல் முறையாக சொந்த மண்ணில் நியுசிலாந்துக்கு எதிராக 3 0 என்ற நிலையில் படுதோல்வி அடைந்தது. இதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்து 10 ஆண்டுகளில் முதல் முறையாக பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தக்கவைக்க தவறியது. 
 
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களில் தோல்வியடைந்தது ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் அணுகுமுறை குறித்து கேள்விகளை எழுப்பியது. கேப்டன்சியைத் தவிர, ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் விமர்சனத்திற்கு உள்ளானது, ஏனெனில் அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 6.2 சராசரியாக 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

Sourav Ganguly says Rohit Sharma caused the Indian team to decline in Test cricket ray
ரோகித் சர்மா கேப்டன்சி

இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்பட்ட சரிவு குறித்து சவுரவ் கங்குலி அதிருப்தி தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பு ரோகித் சர்மா ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றார். 

"அவர் (ரோகித்) டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை தொடருவாரா என்று எனக்குத் தெரியாது, ஆனால் என்னைக் கேட்டால், டெஸ்ட்டில் சில விஷயங்களைத் திருப்புவதற்கான பொறுப்பை அவர் ஏற்க வேண்டும்." என்று கங்குலி ரெவ்ஸ்போர்ட்ஸின் டிரெயில்பிளேசர்ஸ் 3.0 இல் கூறினார்.

"இந்தியா தற்போது டெஸ்ட்டில் சிறப்பாக இல்லை, அவர்கள் அதை பார்க்க வேண்டும், இங்கிலாந்தில் நன்றாக விளையாட ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும், ஏனெனில் அது மிக முக்கியமான ஐந்து டெஸ்ட் தொடராக இருக்கும். ரோஹித் இந்த அணியை முன்னோக்கி கொண்டு செல்ல ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.


ரோகித் சர்மா வெற்றி சதவீதம்

விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 1-2 தொடருக்குப் பிறகு டெஸ்ட்டில் தனது கேப்டன் பதவியை துறந்த பிறகு, 2022 இல் இலங்கை தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றார். மறுபுறம், ரோஹித் சர்மா இந்திய அணியை 24 போட்டிகளில் வழிநடத்தி 12 போட்டிகளில் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வியடைந்து 50% வெற்றியை பெற்றுள்ளார்.

ரோஹித் சர்மா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு தொடர்ச்சியான டெஸ்ட் தொடர்களில் தோல்வியடைவதற்கு முன்பு இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு எதிரான தொடர்களில் இந்தியாவை வழிநடத்தினார்.

2027 உலகக்கோப்பைக்கு இந்தியா டார்கெட்! 9 'நான் ஸ்டாப்' ஓடிஐ சீரிஸ்! முழு அட்டவணை!

சவுரவ் கங்குலி அறிவுரை

ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்து கங்குலி கவலை தெரிவித்தார். இந்திய கேப்டன் தனது திறமைக்கு ஏற்ப டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும் என்றார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரோகித் சிந்திக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

"கடந்த 4-5 ஆண்டுகளில் சிவப்பு பந்தில் அவரது ஃபார்ம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவரது திறமைக்கு ஏற்ப அவர் சிறப்பாக செயல்பட முடியும்" என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கூறினார். 

"நாம் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளோம், அது கடினமான தொடராக இருக்கும். ஆஸ்திரேலியாவில் இருந்தது போலவே பந்து சீம் ஆகும். ஸ்விங் ஆகும். டெஸ்ட்டில் இந்தியாவுக்கு அவர் சிறப்பாக விளையாட வேண்டும்" என்று கங்குலி தெரிவித்தார். 
 

சவுரவ் கங்குலி-ரோகித் சர்மா

தொடர்ந்து பேசிய சவுரவ் கங்குலி, ''தலைமைத்துவம் மிகவும் முக்கியமானது. ரோகித் சர்மா ஒரு அற்புதமான கேப்டன் என்று நான் எப்போதும் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் அதைத்தான் நான் பார்க்கிறேன், அவர் இந்தியாவை கேப்டனாக வழிநடத்தும் போது நான் அதைத்தான் கவனிக்கிறேன். அவர் மும்பை இந்தியன்ஸை கேப்டனாக வழிநடத்தியதை பார்த்திருக்கிறேன். நான் இந்தியாவுக்கு கேப்டனாக பல போட்டிகளில் விளையாடியுள்ளேன், எனவே ஒரு கேப்டனின் குணாதிசயங்களை என்னால் பார்க்க முடியும்" என்று கூறியுள்ளார்.

CSK vs MI டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி அறிவிப்பு! டிக்கெட் விலை என்ன? எங்கு வாங்கலாம்?

Latest Videos

click me!