2027 உலகக்கோப்பைக்கு இந்தியா டார்கெட்! 9 'நான் ஸ்டாப்' ஓடிஐ சீரிஸ்! முழு அட்டவணை!
2027ல் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய அணி 9 ஓடிஐ தொடர்களில் விளையாட உள்ளது. இது தொடர்பான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
2027ல் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய அணி 9 ஓடிஐ தொடர்களில் விளையாட உள்ளது. இது தொடர்பான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
India's ODI schedule: Series and tours till 2027: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் 'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அடுத்தாக வரும் 2027ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி 27 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. மொத்தம் 9 ஓடிஐ தொடர்களில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில், 2027ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை வரை இந்திய அணி விளையாட உள்ள ஓடிஐ தொடர்கள் குறித்த அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.
1. வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 2025 இல் திட்டமிடப்பட்ட மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்
இந்திய அணி அக்டோபர் மற்றும் நவம்பர் 2025க்கு இடையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.
3. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்
இந்திய அணி நவம்பர் மற்றும் டிசம்பர் 2025க்கு இடையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
போலீஸ் வேடத்தில் கலக்கும் 'தாதா'! சவுரவ் கங்குலி நடித்த வெப் சீரிஸ்! அட! இயக்குநர் இவரா?
4. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்
இந்திய அணி 2026 ஜனவரியில் சொந்த மண்ணில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்துடன் விளையாட இருக்கிறது.
5. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி 2026 ஜூன் மாதம் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தானுடன் விளையாட உள்ளது.
6. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்
இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது. இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் இந்த தொடர் ஜூலை 2026 இல் நடைபெறும்.
7. வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்
இந்திய அணி செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2026 க்கு இடையில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.
8. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்
இந்திய அணி செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2026 க்கு இடையில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது.
9. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்
இந்திய அணி டிசம்பர் 2026 இல் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாட உள்ளது.
IPL: அதிக விலைபோன வீரர்கள் 2024 சீசனில் எப்படி விளையாடினார்கள்? முழு அலசல்!