சரத் கமல்
2024ம் ஆண்டின் ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் ஜூலை 26ம் தேதி கோலாகலமாகத் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து மொத்தமாக 10 ஆயிரத்து 500 வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளனர்.
ஒலிம்பிக் திருவிழாவில் சரத் கமல்
இந்தியா சார்பாக 117 வீரர்கள் ஒலிம்பிக்கில் களம் காண்கின்றனர். இதனிடையே ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய அணியை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுடன் இணைந்து தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் வழி நடத்த உள்ளார்.
நடாலுடன் சரத் கமல்
1982ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி சென்னையில் பிறந்தவர் சரத் கமல், சென்னையிலேயே பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்த சரத் கமலின் தந்தையும், மாமாவும் டேபிள் டென்னிஸ் வீரர்கள் தான். அதன் தொடர்ச்சியாக சரத் கமலும் பள்ளிப் பருவத்தில் இருந்தே டேபிள் டென்னிசில் ஆர்வம் காட்டி வந்தார். மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் பல முன்னணி வீரர்களை வீழ்த்தி பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளார்.
சரத் கமல்
சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக டேபிள் டென்னிஸ் விளையாடி வரும் சரத் கமல், காமன்வெல்த் போட்டி, ஆசிய போட்டி, தேசிய அளவில் 10 முறை சீனியர் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை தன் வசம் வைத்துள்ளார்.
சரத் கமல்
2004ம் ஆண்டு தேசிய போட்டியைத் தொடர்ந்து 2006 முதல் 2010 வரை 5 முறை சீனியலு நேஷனல் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் சரத் கமல் 60 சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். காமன் வெல்த் போட்டிகளில் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளார்.
சரத் கமல்
இந்நிலையில் 5வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாட உள்ள சரத் கமல் இந்திய அணியை வழிநடத்தும் பெருமையையும் பெற்றுள்ளார். அதன்படி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுடன் இணைந்து தொடக்க விழாவில் இந்திய அணிக்கு தலைமை ஏற்று தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.