'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மாவும், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரும் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தனர்.
இந்திய அணியில் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் செயல்பட உள்ளனர். இவர்கள் தவிர விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.